Edappadi Palaniswami Fainted: சென்னையில் திமுக அரசை கண்டித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... அதில் அவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசை கண்டித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேடையில் ஆவேசமாக பேசினார்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசியதால் எடப்பாடி பழனிச்சாமி உடலில் இருந்து நீர் சத்து குறைந்தது. அதனால் லேசாக மயக்கம் ஏற்பட்டதால், அவர் தரையில் அமர வைக்கப்பட்டார். மயங்கிய அவருக்கு விசிறிய பின்னர் இயல்புக்கு திருப்பி மீண்டும் மேடையில் கோஷங்களை எழுப்பினார். பின்னர் அங்கிருந்து நேரடியாக அவரது இல்லத்திற்கு திரும்பினார்.
ஏற்கனவே அவரது பாதுகாவலர் ஒருவரும் திடீரென மயக்கமடைந்தார் என்பதும் அதேபோல் முன்னாள் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுகவின் மாணவர் அணி செயலாளருமான எஸ்.ஆர்.விஜயகுமார் மயங்கி விழுந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Election: இந்த ஏழு மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடக்கலாம்?
வெயிலின் தாக்கம் காரணமாக இரண்டு பெண்கள் மயக்கமடைந்தனர். ஒட்டுமொத்தமாக அதிமுக ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட 5 பேர் மயக்கமடைந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்று நடைபெறும் முதல் ஆர்ப்பாட்டம் இது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அப்போது முன்னாள் தமிழகம் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற உன்னை அறிந்தால் என்ற திரைப்படப் பாடலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேடையில் பாடிக் காண்பித்தார்.
திமுக அரசை விடியா அரசு என்று சாடிய எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் முடிந்து ஆட்சிப் பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆகிறது, தமிழக மக்கள் தினமும் துடித்து கொண்டு இருக்கிறார்கள், மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து நடைபெறும் ஆர்ப்படத்தை பார்த்து ஸ்டாலின் நடு நடுங்கி கொண்டு இருக்கிறார் அதனை திசை திருப்ப அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார் என்று விமர்சனம் செய்தார்.
சுமார் 15 வருடங்கள் நாட்டு மக்களுக்கு சிறப்பான ஆட்சியை வந்தவர் ஜெயலலிதா என்றும் அதிமுகவின் இரு பெரும் தலைவர்களும் சாதரணமாக இந்த இடத்திற்கு வரவில்லை எனவும் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக மாற்றியவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என்று அதிமுக அரசை முன்னாள் முதலமைச்சர் பாராட்டி பேசினார்.
மேலும் படிக்க | காபி: சுவைத்தால் ருசி ஆனால் ஆரோக்கியத்தை பதம் பார்க்கும்
உன்னுடைய அப்பா கருணாநிதியாலே அதிமுகவை அழிக்க முடியவில்லை நீயெல்லாம் எந்த மூலைக்கு? என்றும், எந்த கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது, தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் என்றும் கூறிய பழனிச்சாமி, எங்களுக்கு தொண்டர்கள் ஆதரவு உள்ளது என்று கூறினார்.
ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் ஆகிறது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று மக்கள் கேள்வி எழுப்புவதாக கூறிய எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக தமிழகம் அதுறுகிற அளவுக்கு அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது என்றும் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் உள்ளது இந்த திமுக அரசு என்று விமர்சனம் செய்தார்.
விஞ்ஞான மூளை படைத்த கட்சி திமுக என்றும் மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கான சுமையை உயர்த்தி உள்ளது என்று விமர்சனம் செய்த எடப்பாடி, 2011இல் எங்கள் ஆட்சி போகும் என்றால் அது மின்வெட்டால் என்று அன்று முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வாக்கு மூலம் கொடுத்தார். அது போலவே அவர்கள் ஆட்சி மாறியது என்றும், தமிழகத்தில் மின்தடை ஏற்படும் போது அண்டை மாநிலத்தில் இருந்து மின்சாரம் வாங்கி வழங்கிய அரசு அதிமுக அரசு என்றும் கூறினார்.
மேலும் படிக்க | அரசியல் கட்சிகள் அள்ளி விடும் ‘இலவச’ வாக்குறுதிகள்; SC அளித்த முக்கிய உத்தரவு
சொத்து வரி உயரவை திமுக அரசு திரும்ப பெற வேண்டும், மின் கட்டண உயர்வை திருமப பெற வேண்டும் இன்று வலியுறுத்திய எடப்பாடி பழனிச்சாமி, செங்கல் மணல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கட்டுமான பணிகளுக்கு செல்வோர் வேலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான சிமெண்ட் கம்பெனி திமுகவை சேர்ந்தவர்களுடையது என்றும், அதில் 30 ரூபாய் கமிஷன் அடிக்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.
இந்தியாவில் உள்ள 25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார்கள், ஆனால் திமுக அரசு அதை செய்யவில்லை, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறப்பட்டது. அதை இப்போது வரை நிறைவேற்றவில்லை என்றும் திருடன் கையில் சாவியை கொடுத்ததை போல் மக்கள் தவித்து வருகின்றனர் என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார்.
தமிழகம் போதைப்பொருள் மாநிலமாக மாறி விட்டது அதை தடுக்க இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் திமுகவின் மூலதனமே பொய் தான் என்றும் அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்திய துரோகிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்போம் அவர்களை ஓட ஓட விரட்டி அடிப்போம் என்றும் கூறி உரையை முடித்தார்.
அப்போது திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இப்படி அவர் ஆவேசமாக பேசிய பிறகு மயங்கி விழுந்தார் இது சிறிது நேரம் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | 2 மத்திய அமைச்சர்கள் ஒரே நாளில் ராஜினாமா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ