10-ம் வகுப்பு தேர்வு முடிவு: நாளை வெளியீடு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற்றது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12,187 பள்ளிகளில் இருந்து மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
பள்ளி மாணவ-மாணவிகளில் மாணவர்கள் 4,98,406 பேர், மாணவிகள் 4,95,792 பேர் ஆவர். மாணவிகளை விட 2,614 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதினர். பள்ளி மாணவர்கள் தவிர 43,824 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதி உள்ளார்கள்.
சென்னையில் 571 பள்ளிகளில் இருந்து மொத்தம் 51,664 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர் இவர்களில் 25,280 மாணவர்கள் மற்றும் 26,384 மாணவிகள் ஆவார்கள்.
இந்நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு இணையதளம் மூலம் வெளியிடப்பட உள்ளது.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in இந்த இணையதளங்களில் காணலாம்.
மாணவர்கள் குறிபிட்டு உள்ல செல்போனுக்கு SMS மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்படும்.