தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தபடுமென்று அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் தெரிவித்திருந்தார். தமிழ்நாடு அரசின் இந்த முடிவுக்கு பலரும் தங்களது கண்டனத்தையும், அதிருப்தியையும் தெரிவித்துவருகின்றனர். மேலும் அரசியல் கட்சிகள் போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றன. அந்தவகையில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. சேலம் மாநகர் மாவட்ட பாஜக சார்பில் பழைய நாட்டாண்மை கழக கட்டடம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்குதுக்கு மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் பங்கேற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தப் போராட்டத்தில் பேசிய ராமலிங்கம், “கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று ஊரடங்கால் பொதுமக்கள் பாதித்து, இயல்பு நிலை திரும்பிய நிலையில், மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.


மேலும் படிக்க | பழனிசாமியால் நீக்கப்பட்டவர்கள் கட்சி பணியாற்ற ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு


ஏற்கெனவே, சொத்து வரியை உயர்த்தியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கும் வகையில் திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால், மாநில அரசு வரியை குறைத்துக்கொள்ள முன்வரவில்லை.



மத்திய அரசு மின்சார உற்பத்தியில் தன்னிறைவு காண வேண்டும் என்ற நோக்கில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டியே கடிதம் எழுதியது. மின் கட்டணம் உயர்த்த நிர்பந்தித்து எந்தக் கடிதமும் எழுதவில்லை. திமுக அரசானது, மத்திய அரசு மீது குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | மாணவி உயிரிழப்பு - முதல்வருக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம்


மாதம் ஒரு முறை மின் கட்டண கணக்கீடு செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியதை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவாரா, மின் கட்டணத்தை குறைக்கவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டம் பாஜக சார்பில் தொடர்ந்து நடத்தப்படும். மின் கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 27ஆம் தேதி கரூரில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன போராட்டம் நடத்தப்படவுள்ளது” என்றார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ