எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களான ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோரும், அவரது மகனும் எம்.பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்தும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோல், கட்சிக் கொள்கைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாக முன்னாள் எம்எல்ஏ திண்டுக்கல் சுப்புரத்தினம், அம்மா பேரவை துணைச் செயலாளர் மாறன், இலக்கிய அணி துணைச் செயலாளர் முருகேசன், வலசை மஞ்சுளா, வேலூர் சுரேஷ் பாபு,திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அவரது மகன் ஜவஹர் உள்ளிட்டோரையும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மேலும் படிக்க | பெண் குழந்தைகளை ஆசிரியர்கள் கவனமுடன் கையாள வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் கட்சி பணியாற்ற வேண்டுமென்று ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும், அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள்.
ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயாளர், தொகுதிக் கழகச் செயலாளர் மற்றும் தொகுதிக் கழக இணைச் செயலாளர்கள் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு,ஏற்கெனவே பணிபுரிந்தவர்கள் மீண்டும் அந்தந்தப் பொறுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதையும், காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். கழக உடன்பிறப்புகள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், தொகுதிக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதிக் கழக இணைச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | தடயத்தை அழிக்க திருடன் செய்த காரியத்தை பாருங்கள் -சிசிடிவி காட்சி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ