சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் ஏகப்பட்ட படங்களை வெளியிட்டுவருகிறார். தமிழில் வெளிவந்த பீஸ்ட், விக்ரம், ராக்கெட்ரி உள்ளிட்ட படங்கள் முதல் வரவிருக்கும் கோப்ரா உள்ளிட்ட படங்கள்வரை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனமே வெளியிடவிருக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு உதயநிதி அனைவரையும் மிரட்டி படம் வாங்கி வெளியிடுகிறார் என விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதனை உதயநிதி கடுமையாக மறுத்துவருகிறார். இந்தச் சூழலில் தமிழ் படங்கள் மட்டுமின்றி இந்தி படங்களை விநியோகம் செய்யும் செயலில் உதயநிதி இறங்கியிருக்கிறார். அந்த வகையில் இந்தியில், அமீர்கான் நடித்த லால் சிங் சத்தா படத்தை தமிழகத்தில் உதயநிதி வெளியிடுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், இந்தி திணிப்புக்கு எதிராக திமுக தீவிரமாக களமாடும் நிலையில் அக்கட்சியின் தலைவருடைய மகனும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் எப்படி இந்தி படத்தை வெளியிடலாம் என பலர் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.



இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தாத்தாவும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி, இந்தி மொழியை தமிழகத்தில் எந்த வடிவிலும் நுழைய அனுமதிக்கமாட்டோம் என்றார். அவரது பெயரனும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், ஆமிர்கான் நடித்துள்ள லால் சிங் சத்தா என்ற இந்திப் படத்தை தமிழகம் முழுவகும் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளார். அரசியலைவிட தொழிலே பிரதானம் என்பது இதுதானோ” என பதிவிட்டுள்ளார்.


 



முன்னதாக லால் சிங் சத்தா படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பேசிய உதயநிதி, “நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வகுப்பை தவிர்த்துவிட்டு அமீர்கானின் 'ரங்கீலா' படத்தை பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு நான் அமீர்கானின் ரசிகன். 



'லால் சிங் சத்தா' திரைப்படத்தினை தமிழில் வெளியிடுவதற்கு முதலில் நாங்கள் மறுத்தோம். தமிழ் திரைப்படங்களே போதும். இந்தி திரைப்படங்கள் வேண்டாம் என்றும் எண்ணினோம். திடீரென்று ஒரு நாள் அமீர் கான் வீடியோ காலில் தொடர்பு கொண்டு, 'லால் சிங் சத்தா' படத்தினை நீங்கள் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். உடனே சரி என்று ஒப்புக் கொண்டேன்” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | இதுக்காக தான் ஐடி ரெய்டு நடத்துறாங்க! நடிகர் கார்த்தி விளக்கம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ