கன்னட மொழியில் உருவாகிவரும் படம் 'அரபி'.தன்னுடைய இரண்டு கைகளையும் இழந்த நிலையிலும் விடாமுயற்சியினால் சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தை  கன்னட இயக்குநர் ராஜ்குமார் இயக்க ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, விஸ்வாஷின் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். 



இப்படத்திற்காக இயக்குனர் ராஜ்குமார், அண்ணாமலையை அணுகியபோது படத்தின் கதை கேட்டு பிடித்துப்போன அண்ணாமலை படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு, சம்பளமாக ரூ.1 பெற்றுக்கொண்டார். 


இந்நிலையில் 'அரபி' படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தமிழ்நாடு பாஜக தலைவரின் புதிய அவதாரத்தை காண்பதற்கு தமிழக பாஜக தொண்டர்கள் ஆர்வமாக இருந்தனர்.


மேலும் படிக்க | கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்


ஆனால் திடீரென படத்தின் டீசர் இன்று வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இன்று இப்படத்தின் டீசர் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அண்ணாமலையின் புதிய அவதாரத்தை இன்று காண முடியாத பாஜக தொண்டர்கள் சோகமடைந்துள்ளனர்.



இதற்கிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் படத்தில் நடித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 


அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “உதயநிதி ஸ்டாலின் போல் எனக்கு நன்றாக நடிக்க தெரியாது. நான் சுமாரான நடிகன் மட்டுமே. கர்நாடகாவில் இரண்டு கைகளை இழந்த நீச்சல் வீரர் விஸ்வாஸ் என்பவர் இருக்கிறார். அவர் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவுக்காக தங்கப்பதக்கங்களை பெற்றிருக்கிறார்.


மேலும் படிக்க | தலித் சாமியாரின் எச்சில் உணவை வாங்கி சாப்பிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ


ஒருமுறை அவர் என்னை நேரில் சந்தித்து ஒரு படத்தில் நடிக்கிறேன். அதில் இந்திய நீச்சல் பயிற்சியாளராக 5 நிமிடங்கள் நடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். 


அதற்கு நான், என்னை சாதாரணமாகவே மக்கள் பார்க்கமாட்டார்கள். படம் நடித்தால் பார்ப்ப்பார்களா என்றேன். இல்லை நீங்கள்தான் நடிக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்.


கதையை கேட்டு பிடித்துப்போனதால் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி அதில் நடித்தேன். அந்த ஒரு ரூபாயையும் போன வருடம் ஐயப்பன் கோயில் உண்டியலில் போட்டுவிட்டேன். இன்று அந்தப் படத்தின் டீசர் வெளியாக வேண்டியது. ஆனால் டப்பிங் பிரச்னையால் டீசர் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும்” என்றார்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR