தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிகவும் கைராசிக்காரர். கர்நாடகாவில் தமிழர்களின் 80 ஆயிரம்  வாக்குகளுக்களை கைப்பற்ற பணியாற்றி வெறும் வெறும் 10 வாக்குகள் பெற்று தந்துள்ளார் என அண்ணாமலையை மா.சு கிண்டல் செய்துள்ளார்.  சென்னை மதுரவாயல் அருகே போருரில் திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை  விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதுரவாயல் எம்.எல்.ஏ காரம்பாக்கம் கணபதி தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 500-1000 செல்லாது என்ற அறிவித்த போது பணத்தை மாற்றி பெற மக்கள் பட்ட அவதிகள் மக்கள் இன்னும் அந்த மனநிலையில் இருந்து மாறவில்லை அதற்குள் மோடி அரசின் இந்த 2000ரூபாய்  செல்லாது என்ற கோமாளி தனமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | புதுமைப் பெண் திட்டம்: திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டம் - உயர்க்கல்வியால் உயரும் பெண்கள்!


இதற்கான முக்கிய காரணம் சமூகவலைகளத்தில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் கர்நாடக பாஜக தோல்வி.  கர்நாடக தேர்தல் தோல்வி அவமானத்தை மறைக்க பாஜக அரசு 2000 ரூபாய் செல்லாது என பொருத்தமற்ற அறிவிப்பை அறிவித்துள்ளனர்.  80 ஆயிரம் தமிழர்கள் இருக்கக்கூடிய இந்த வாக்குகளும் தொகுதியில் அனைத்து வாக்குகளையும் பாஜக பெற வேண்டும் என்ற காரணத்தில் தமிழகத்தின் வீராதி வீரர் சூராதி சூரர் அண்ணாமலை அங்கு தேர்தல் களப்பணி மேற்கொண்டார் ஆனால் அங்கு வெறும் பத்து ஓட்டு பாஜக பெற்றது. அண்ணாமலை கைராசிக்காரர் என  அமைச்சர் மாசு கிண்டல் செய்தார். கர்நாடகத்தில் பாஜகவின் தோல்வி அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி இது திமுகவிற்கு எழுச்சி என்றார்.


கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய அரசை கண்டித்து பா.ஜ.க சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில விவசாயிகள் அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தின்போது கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு எதிராகவும், திமுக அரசை கண்டித்தும் பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர். மேலும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாகவும்,  அதை தடுக்க  உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.


ஆர்ப்பாட்டத்தின் போது பேட்டியளித்த பாஜகவின் மாநில விவசாயிகள் அணி  தலைவர் ஜி.கே.நாகராஜ், 'தமிழகத்தில் கள்ள சாராய விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும், டாஸ்மாக் கடைகளையும் குறைக்க வேண்டும் என அரசுக்கு இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது.  அழிவு பாதையை நோக்கி தமிழகம் சென்று கொண்டு இருக்கிறது, கள்ளசாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் வழங்கி இருக்கும் அரசு, விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதில்லை.  பல ஆண்டுகளாக கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கின்றோம், கள் ஒரு சத்தான உணவு, அதற்கான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை, ஆனால் மிகவும் உடலுக்கு கெடுதியான சாராயத்தை முன்னெடுத்து கொண்டு இருக்கின்றது' என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர். 


மேலும் படிக்க | கள்ளச்சாராய மரணம்: CBCID விசாரணை தொடங்கியது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ