அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியாது - வைத்தியலிங்கம்

மக்களவை தேர்தலுக்கு முன் அதிமுக ஒன்று சேர வேண்டும். இல்லையேல் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என ஓ.பி.எஸ் அணியின் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 20, 2023, 05:22 PM IST
  • அதிமுக ஒன்று சேர்ந்தால் மட்டுமே வெற்றி பெறும்
  • நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இது நடக்க வேண்டும்
  • இல்லையென்றால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது
அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியாது - வைத்தியலிங்கம் title=

ஓபிஎஸ் ஆலோசனை

அதிமுக ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது சேலத்தில் மாநாடு நடத்துவது குறித்தும் அதில் பங்கேற்பது குறித்தும் ஓபிஎஸ் அணியின் நகர ஒன்றிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அதிமுக ஜெயிக்காது

முன்னதாக சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சருமான வைத்தியலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், " வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அதிமுக ஒன்றிணைய வேண்டும். அப்பொழுது தான் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும். இல்லையெனில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. தற்போது எடப்பாடி அணியில் இருப்பவர்களும் சிந்திக்க தொடங்கி விட்டனர். இணைப்பிற்கு எடப்பாடி ஒத்து வந்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு செய்யும் நன்றி கடன். இல்லையென்றால் அவரை ஒதுக்கிவிட்டு அதிமுகவை ஒன்று சேர்ப்போம்.

மேலும் படிக்க | தொடர்ந்து நடக்கும் டிராபிக் போலீஸ்சின் அட்டூழியம்! பொதுமக்கள் வேதனை!

காமராஜ் மீது கடும் சாடல்.

சேலத்தில் நேற்று ஏற்பட்ட மோதல் குறித்து கேட்டபோது எங்கள் தொண்டர்களுக்கு ஒரு சொட்டு ரத்தம் வந்தால், அவர்கள் மீது 10 சொட்டு ரத்தம் வரும். 2000  ரூபாய் நோட்டு திரும்ப பெற்றது நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றால் அதை நாங்கள் வரவேற்கிறோம். முன்னாள் அமைசார் காமராஜ் பதவிக்காக யாரின் காலில் வேண்டுமானலும் விழுவார். பதவிக்காக நாங்கள் யாரும் கால்களிலும் விழுந்தது இல்லை" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் இணைய சேவை வசதி 89-லிருந்து 93 சதவீதமாக உயர்வு - பிடிஆர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News