COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்காக மேலும் 20 விடுதிகள் கட்ட ரூ.40 கோடியும். ஆதி திராவிட, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க ரூ.71.01 கோடியும் ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு பட்ஜெட்டில் ரூ.1,857.13 கோடி நிதி ஒதுக்கீடு. 



12:15 PM | 08-Feb-2019


சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்காக ரூ.476.26 கோடி நிதி ஒதுக்கீடு. 754 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2011 முதல் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கிராமப்புற கோவில்களுக்கான நிதி உதவி திட்டமும், ஒருகால பூஜை திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பட்ஜெட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு 281.86 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பல்வேறு திருமண நிதி உதவி திட்டங்களுக்காக ரூ.726.32 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். பணிபுரியும் பெண்களுக்கான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு. ஒருங்கிணைந்த குழந்தைகள் பணிகள் மேம்பாடு திட்டத்தில், 24 லட்சம் குழந்தைகள் பலனடைகிறார்கள். 2019-20 பட்ஜெட்டில் சமூக நலத்துறைக்கு 5305 கோடி ஒதுக்கீடு


 



12:00 PM | 08-Feb-2019


கைத்தறி உதவி திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு. மீனம்பாக்கம் - கிளாம்பாக்கம் (வண்டலூர்) இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. பல்வேறு திருமண நிதியுதவி திட்டங்களுக்காக 726.32கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தி துறைக்கு ஒட்டுமொத்தமாக 18,560.77 கோடி ஒதுக்கீடு. 2500 மெகாவாட் அளவிற்கு புதிய புனல் மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மாணவ மாணவிகளுக்கான போக்குவரத்து பயண கட்டண சலுகை 766 கோடி ஒதுக்கீடு. 500 மின்சார பேருந்துகள் சென்னை,கோவை,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இயக்கப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 1264 கோடி ரூபாய் செலவில் உருவாக்க பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார்.



11:45 AM | 08-Feb-2019


டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரிலான மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.959.21 கோடி நிதி. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக்கட்டணத்தை திருப்பியளிக்க ரூ.460.25 கோடி நிதி. சென்னை தவிர்த்து இதர நகரங்களில் வீட்டு வசதியை உருவாக்க 5000 கோடி மதிப்பில் ஆசிய வங்கிக் கடன் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு பட்ஜெட்டில் தகவல். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 7,896ல் இருந்து 5,198ஆக குறைக்கப்பட்டுள்ளது. 



11:21 AM | 08-Feb-2019


மத்திய , மாநில அரசு பங்களிப்புடன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடு கட்டித்தரப்படும். இதற்கு ரூ.1,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2020 மார்ச் 31ல் தமிழக அரசின் கடன் ரூ.3.97 லட்சம் கோடியாக இருக்கும். வேளாண்மை துறைக்கு ரூ.10,550 கோடி ஒதுக்கீடு. காவிரி பாசன பகுதிகளில் பருவ நிலை மாற்ற தழுவல் திட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 1560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செயல்படுத்தி வருகிறது. 



11:21 AM | 08-Feb-2019


மீன்வளத்துறை மேம்பாட்டுக்கு ரூ 927.85 கோடி ஒதுக்கீடு. ஏழை, நடுத்தர மக்கள் வீட்டு வசதியை பெற புதிய கொள்கை உருவாக்கி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். வரும் நிதிஆண்டில் 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்; 420 கோடி நிதி ஒதுக்கீடு. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கான வரவு செலவு மதிப்பீடு ரூ 1000 கோடி ஒதுக்கீடு. கரும்பு விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த மாநில அரசின் சார்பில் 200 கோடி ஒதுக்கீடு. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி, உயர்கல்விக்கு ரூ 4584 கோடி ஒதுக்கீடு. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு 38000 குடியிருப்பு. அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ரூ 100 கோடி நிதி ஒதுக்கீடு. வறுமை ஒழிப்புக்கு ரூ 1031 கோடி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கு ரூ.6,265 கோடி ஒதுக்கீடு. 



11:08 AM | 08-Feb-2019


2018-19 ஆண்டில் 9.3  லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 6118 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது ; இந்த ஆண்டு 10 ஆயிரம் கோடி கடன் வழங்க திட்டம். ஆழ்கடல் மீனவர்களின் தொலைத் தொடர்பு வசதிக்காக 18 உயர்மட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்படும் ; 80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொடர்பு கருவிகள் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை , சித்திக் குழு அறிக்கை பரிசீலனையில் உள்ளது. 



11:05 AM | 08-Feb-2019


தமிழகத்தில் உள்ள 89 அணைகளில் 745.49 கோடி செலவில் புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது இந்த திட்டத்திற்காக 43 கோடி ஒதுக்கீடு 37 அணைகளில் கட்டமைப்பை புனரமைக்கும் பணிகளை 2வது கட்டமாக மேம்படுத்தப்படும் அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைவில் தொடங்க உள்ளது அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கீடு திட்டத்தின் ஒரு பகுதியாக சுய பயன்பாட்டுக்கு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை 132.8 கோடி செலவில் செயல்படுத்த முடிவு v 2019-20 பட்ஜெட்டில் நீர்வளத்துறைக்கு ரூ.5983.98 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


மீனவர்கள் நலனை பேண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது-ஓபிஎஸ் மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிதி உதவி திட்டத்திற்காக 170.13 கோடி ஒதுக்கீடு பாக் விரிகுடா பகுதியில் 1600 கோடி திட்ட மதிப்பில் மீன்பிடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது முதல் கட்டமாக 500 இழுவலை படகுகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு ராமநாதபுரம் மாவட்டம், பூம்புகார் துறைமுகத்தில் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது 420 கோடி செலவில் தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் மீன்பிடி துறைமுகங்களை கட்ட அனுமதி



10:50 AM | 08-Feb-2019


10 குதிரைத்திறன் கொண்ட சூரிய சக்தியில் இயங்கும் 2000 பம்புசெட்டுகள் 90 சதவீத மானியத்துடன் வழங்கப்படும். 2019-20இல் நெல் கொள்முதல் ஊக்கத்தொகைக்காக ரூ.180 கோடி ஒதுக்கீடு. 
சாதாரண நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.1,800, சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,830 வழங்கப்படும் 


பள்ளிகளில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை பெண்குழந்தைகள் கல்வி ஊக்கத் திட்டத்திற்கு ரூ.47.7 கோடி ஒதுக்கீடு. சென்னையில் ரூ.2000 கோடி செலவில் விரிவான ஒருங்கிணைந்த வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.  


2018-19ல் 8000 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது உரிய காலத்தில் பயிர்க்கடன் திரும்ப செலுத்துவோருக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது வரும் நிதியாண்டில் 10,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது 75,448 பெண்கள் இலவச கறவை மாடு திட்டத்தால் பலன் பெற்றுள்ளனர் விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் விலையில்லா மாடு, ஆடு திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும்-ஓபிஎஸ் தீவன அபிவிருத்தி திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு கால்நடை பராமரிப்பு துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளோம்


10:35 AM | 08-Feb-2019


வேளாண்மை துறை தோட்டக்கலை கல்லூரிகளை மேம்படுத்த ரூ.79.73 கோடி ஒதுக்கீடு 21.70 லட்சம் விவசாயிகள் பிரதமரின் வேளாண் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர் 2019-20ம் நிதியாண்டில் பயிர் காப்பீடு திட்டத்தில் புதிய பகுதிகள், பயிர்கள் சேர்க்கப்படும் ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற திடீர் பாதிப்புகளும் இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் இத்திட்டத்திற்கான தமிழக காப்பீடு பங்குத்தொகையாக 621.51 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.  


நீர் சேமிப்பை அதிகரிக்க நுண்ணீர் பாசனத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்கும் 1361 கோடி செலவில் மேலும் 2 லட்சம் ஹெக்டேர் செலவில் நுண்ணீர் பாசன திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் சூரிய சக்தியில் பம்பு செட்டுகளை இயக்க 90 சதவீத மானியம் வழங்குகிறோம் 10 குதிரை சக்திகள் வரை இயங்கும் 2000 சூரிய மின்சக்தி பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம். 


10:45 AM | 08-Feb-2019


காவல்துறை நவீனமயமாக்கப்படும் திட்டம் செயல்படுத்தி வருகிறோம் கணினி இணைப்பு திட்டத்தால், காவல்துறை நவீனமயமாக்கப்பட்டுள்ளது காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு- ஓபிஎஸ் நவீனமயமாக்கும் திட்டம் உட்பட காவல்துறைக்கு 8,884.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  


தமிழ் பண்பாட்டை காப்பாற்ற அரசு உறுதியாக உள்ளது-ஓபிஎஸ் யுனெஸ்கோ தயாரித்துள்ள செல்வாக்குள்ள மொழி பட்டியலில் தமிழ் 14வது இடத்தில் உள்ளது இந்த பட்டியலில் தமிழை 10வது இடத்திற்கு கொண்டுவர முயற்சி எடுத்துள்ளோம் ஹார்வார்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டுள்ளது பிற சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது



10:27 AM | 08-Feb-2019


வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ரூ.1031 கோடி நிதி ஒதுக்கீடு. 2000 மின்சார பேருந்துகள் வாங்கப்படும்; சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.


திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் நலிவடைந்த பிரிவினருக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது வேட்டி, சட்டை இலவசமாக தரப்பட்டது சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.3958 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது- ஓபிஎஸ் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ரூ.1031 கோடி நிதி ஒதுக்கீடு. 


சென்னையில் ரூ. 2000 கோடி செலவில் மல்டி பார்க்கிங் கட்டிடம் அமைக்கப்படும் 2 லட்சம் கார்கள், 4 லட்சம் இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும் கஜா புயல் பாதித்த பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.1700 கோடி ஒதுக்கீடு. 



10:25 AM | 08-Feb-2019


வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக ரூ.1031 கோடி நிதி ஒதுக்கீடு. நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ284 கோடி ஒதுக்கீடு. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ403.76 கோடி ஒதுக்கீடு. 



10:20 AM | 08-Feb-2019


விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு. ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை. விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை, நிரந்தர ஊனத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம்.   



10:16 AM | 08-Feb-2019


தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ403.76 கோடி ஒதுக்கீடு. வரி வருவாய் ரூ1,97,721 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. 



10:03 AM | 08-Feb-2019


சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்... 



9:50 AM | 08-Feb-2019


பட்ஜெட் உரை அடங்கிய பெட்டியுடன் சட்டப்பேரவைக்கு வந்தனர் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்... 



9:33 AM | 08-Feb-2019


சட்டசபைக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வருகை.. 



2019-20ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்! 


2019-20ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்ய உள்ளார். மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால், பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக சட்டசபையில் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம் 2 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 8 ஆம் தேதி முதலமைச்சர் பதில் உரையுடன் சட்டசபை கூட்டம் முடிவடைந்தது. இந்த நிலையில்,   2019-20ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.


துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அவர் 8வது முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். வழக்கமான பட்ஜெட் போல் இல்லாமல், மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றதைப் போல் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளும், வரிச் சலுகைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை முடித்தபிறகு, இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெறுகிறது.


இதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக, சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதி முடிவு செய்யப்பட உள்ளது.


இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழக அரசின் கடன் அளவு மூன்றரை லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது. கஜா புயல் நிவாரணச் செலவு, பொங்கல் பரிசு செலவு போன்ற செலவுகளால், தமிழக அரசின் கடன் சுமை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என கூறப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.