முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் பற்றிய முழு விவரம்!
தமிழக முதல்வர் இன்று டெல்லி சென்று பிரதமர், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோரை சந்திக்கிறார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை 10:30 மணிக்கு குடியரசு துணை தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். இதனைத் தொடரந்து காலை 11:30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு மசோதா குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மாலை 4:30 மணிக்கு பிரதமர் பிரதமர் மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவிக்கின்றார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது தமிழக ஆளுநர் ரவியின் செயலற்ற தன்மை குறித்தும் ஸ்டாலின் பிரதமரிடம் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு முதல்வர் முக ஸ்டாலின் புதன்கிழமை இரவு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும் படிக்க | நான் கிறிஸ்தவர் என்பதால் தேசிய கொடி ஏற்றமாட்டேன் - தலைமை ஆசிரியையின் செயலால் சர்ச்சை
எனவே, ஸ்டாலின் பிரதமரை தொலைபேசியில் மட்டுமே உலகளாவிய நிகழ்வுக்கு அழைத்தார். ஏப்ரல் 2022-ல், தேசிய தலைநகரில் திமுக அலுவலக திறப்பு விழாவிற்காக டெல்லிக்கு விஜயம் செய்த ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அரசு பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளையும் பார்வையிட்டார். ஸ்டாலினின் இந்த டெல்லி பயணம் அரசியல் வட்டாரங்களில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ