‘நாங்கள் பந்திக்கு முந்த மாட்டோம், தேவை இல்லாத பேச்சு வேண்டாம்’: ஜெயக்குமார் பளிச் பேட்டி

Tamil Nadu: போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை? கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 16, 2022, 03:36 PM IST
  • சபாநாயகர் அப்பாவு தன் பணியை மட்டும் பார்க்க வேண்டும்: ஜெயக்குமார்
  • கட்டப்பஞ்சாயத்து ராஜாவாக செயல்பட கூடாது: ஜெயக்குமார்
  • அதிமுக-வினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சபாநாயகர் கூறுவது தேவையற்ற பேச்சு: ஜெயக்குமார்
‘நாங்கள் பந்திக்கு முந்த மாட்டோம், தேவை இல்லாத பேச்சு வேண்டாம்’: ஜெயக்குமார் பளிச் பேட்டி  title=

அதிமுக சார்பில் ஓ. பன்னீர்செல்வத்தை துணை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் இருந்து  நீக்க வேண்டும் என்று கொடுத்த மனுவை துணை சபாநாயகர் சட்டப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். சபாநாயகர் கட்டப்பஞ்சாயத்து ராஜாவாக செயல்பட கூடாது’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்ணா தொழிற்சங்க உண்ணாவிரதப்போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ‘போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை? இந்த அரசிடம் கூறுவது செவிடன் காதில் சங்கு ஊதுவது போல உள்ளது. நாங்கள் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வேலைநிறுத்தம் செய்ய விரும்பவில்லை. ஆனால் அந்த நிலைக்கு தள்ள வேண்டாம்’ என கூறினார்.

மேலும் படிக்க | தமிழர் அல்லாதோர் மாவட்ட ஆட்சியர்களாக இருக்கிறார்கள் - வேல்முருகன் காட்டம்  

சபாநாயகர் அப்பாவு தன் பணியை மட்டும் பார்க்க வேண்டும். கட்டப்பஞ்சாயத்து ராஜாவாக செயல்பட கூடாது. அதிமுக-வினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சபாநாயகர் கூறுவது தேவையற்ற பேச்சு.’ என்ரு அவர் மேலும் தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேனீர் விருந்தில் அதிமுக ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அதில் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று தெரிவித்தார். நாங்கள் ஓபிஎஸ் போல பந்திக்கு முந்திக்கொள்ள மாட்டோம். ஓபிஎஸ் உடன் 80% தொண்டர்கள் இல்லை வெறும் 80 தொண்டர்கள் தான் உள்ளனர்’ என விமர்சனம் செய்தார்.

மேலும் ‘கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தான் பார்க்க வேண்டும். எனவே அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தை துணை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கொடுத்த மனுவை துணை சபாநாயகர் சட்டப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் மாண்புமிகு சபாநாயகர், இல்லையென்றால் மாண்பில்லா சபாநாயகர் என்று அழைக்கப்படுவார். அதிமுக ஆட்சியின் போது சிறப்பாக செயல்பட்டு வந்த காவல்துறை இன்று திமுகவின் ஏவல்துறையாக மட்டுமே உள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | TNEA 2022: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News