மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை தடுப்பணை கட்ட ஆய்வு... -EPS!
மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை எங்கெள்ளாம் தடுப்பணை கட்டலாம் என ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் முதல் கட்டமாக கரூரில் தடுப்பணை கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை எங்கெள்ளாம் தடுப்பணை கட்டலாம் என ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் முதல் கட்டமாக கரூரில் தடுப்பணை கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்ட முதல்வர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சில் பேசிய அவர் கூறுகையில்., நீண்டகாலமாக தீர்க்கமுடியாத பிரச்சினைகள் தீர்க்கவே இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. சரியான மனுக்கள்மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,, நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களுக்கு அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நீர்மேலாண்மை திட்டங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகக் கூறிய முதல்வர், மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை எங்கெங்கு தடுப்பணை கட்டலாம் என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது, முதல் கட்டமாக கரூரில் தடுப்பணை கட்டப்படும் என தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றி வருவதாக தெரிவித்த அவர், தமிழக அரசு விவசாயம் மட்டுமின்றி அதன் சார்பு தொழில் முன்னேற்றத்துக்கும் அனைத்து உதவிகளையும் செய்கிறது. முத்துலட்சுமி மகப்பேறு திட்டத்தின் கீழ் 28,777 பெண்கள் பயனடைந்துள்ளனர் எனறும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் முதல்வரின் சூரிய மின் ஒளி வசதியுடன் பசுமை வீடு கட்டும் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் குடியிருப்பு திட்டத்தின் கீழ் மானிய நிதி உதவிகள், பயிர்கடன் உதவிகள், சுய உதவி குழுக்களுக்கு உதவிகள் உள்பட பல்வேறு உதவிகள் பல இவ்விழாவில் வழங்கப்பட்டது.