திமுக குடும்ப கட்சி என விமர்சிக்க முதல்வருக்கு எந்த அருகதையும் இல்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கரூர் மாவட்ட திமுக சார்பில், மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் சிறப்பு பொதுக்கூட்டம் கரூர் சி.எஸ்.ஐ. விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்றது. 


இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி தலைமை ஏற்ற்றார். சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.


"திமுக-வின் ஊராட்சி சபை கூட்டத்தில் மக்களின் எழுச்சியை பார்த்து தமிழக முதல்வருக்கு எரிச்சல் ஏற்படுகிறது. இதன் காரணமாக திமுக குடும்ப கட்சி என்று விமர்சனம் செய்கிறார். குழந்தையை போன்று தவழ்ந்து சென்று முதல்வர் பதவியை பெற்ற உங்களுக்கு கருணாநிதி பற்றியோ, உழைப்புக்காக கருணாநிதியால் பாராட்டு பெற்ற தலைவர் மு.க.ஸ்டாலினை பற்றியோ விமர்சிக்க எந்த அருகதையோ, தகுதியோ இல்லை.


அதிமுக தலைமையில் தமிழகத்தில் ஒரு மானம் கெட்ட கூட்டணி உருவாகியுள்ளது. நான் கட்சிக்காக உழைக்க தயாராக இருக்கிறேன். உங்களில் ஒருவனாக இருந்து கடைசி வரை கட்சிக்காக உழைப்பேன்.


ஆட்சியில் இல்லாத போதிலும் மக்களுக்காக உழைக்கும் இயக்கம் தான் திமுக, தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். முதல்வர் நாற்காலியில் மு.க. ஸ்டாலின் அமருவார். மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.