தமிழ்நாடு சீருடைப் பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறையின் வீரத்தியாகிகள் புத்தக வெளியீடு மற்றும் 6,119 சீருடைப் பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவலர் பணிக்கென பணி நியமன ஆணைகள் வழங்குவதையும், வீரத் தியாகிகள்  என்ற புத்தகம் வெளியிட தலைமை தாங்குவதிலும் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அவர்., மக்கள் நலனிற்காக இன்னுயிர் நீத்த தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினரின் தியாகத்தை அங்கீகரித்து, அவர்கள் புரிந்த வீர, தீரச் செயல்களை சித்தரித்துள்ள வீரத் தியாகிகள் என்ற புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். 


அதேவேலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தவர் உட்பட 6,119 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 


இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயகுமார், உதயகுமார், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைசெயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.