2019ஆம் ஆண்டில் இருந்து உலகையே உலுக்கி வந்த கொரொனா நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது. இந்த நிலையில், அதன் புது மாதிரி வகையான JN 1 வகை நோயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலை தாக்கத்திலிருந்தே மீள்வதற்கு மக்கள் பெரும் பெரிதும் இன்னல்ப்பட்ட நிலையில், தற்போது புதிதாக பரவி வரும் இந்த ஜெ.என்1 வகை காெரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் பீதியடைந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா-தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு:


இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதனுடன் சேர்ந்து, அந்நோயின் புது வகை நோய் தொற்றான ஜே.என்.1 வகை கொரோனாவும் இந்தியா முழுவதும் மட்டுமன்றி, தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 797 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. தமிழகத்தில், கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகளுடன் வந்தவர்களுக்கு 777 பேருக்கு நேற்று ஒரே நாளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 


தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை:


தமிழகத்தில், குறிப்பாக சென்னை உள்பட மக்கள் அதிகம் புழங்கும் சில முக்கிய மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும், மொத்தம் 26 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் சென்னையை சேர்ந்தவர்களாக இருந்தனர். பிறர், செங்கல்பட்டு, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்தனர். 


கொரோனா தொற்றை தடுக்க மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள்:


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிய, தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், கொரோனா நோய் பாதிப்பிற்கான அறிகுறிகளுடன் வருவோருக்கு ஆரம்பத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விடுகிறது. இதனால், கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | சென்னையில் புத்தாண்டு கொண்டாட திட்டமா... இதையெல்லாம் மனசுல வச்சுக்கோங்க!


உயிரிழப்புகள் உண்டா? 


முன்னர் கொரோனா நோய் தொற்று பரவிய சமயத்தில் பல உயிரிழப்புகள் நேர்ந்த நிலையில், தற்போது அதை கட்டுப்படுத்த பல வித முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமன்றி கொரோனா இரண்டாம் அலையின் போதே, பல லட்சம் பேருக்கு தடுப்பூசிகளும், அதற்கடுத்த சில மாதங்களில் பூஸ்டர் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு விட்டன. இதனால், இம்முறை கொரோனா நோய் தொற்று குறைந்தது மட்டுமன்றி, உயிரிழப்புகள் இல்லாமல் இருக்கின்றன. தமிழகத்தில் இதுவரை கொரோனா உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. 


புதிய வகை கொரோனாவிற்கான அறிகுறிகள்:


>உடலில் அதிக வெப்பநிலை அல்லது நடுக்கம் போன்ற உணர்வு.


>தொடர் இருமல் 


>சுவை திறன் அல்லது நுகரும் திறன் இல்லாமல் இருத்தல். 


>சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுதல்.


>பசியின்மை


>சோர்வான உணர்வு


>தலைவலி, தொண்டை வலி மற்றும் மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல்.


மேலும் படிக்க | ஆளுநர் ஆர்.என். ரவி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு... இருவரும் பேசியது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ