இந்தியா - நியூசிலாந்து: அரையிறுதிப் போட்டி மழையால் ரத்தானால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்?

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை அரையிறுதிப் போட்டி மழையால் ரத்து ஆனால் ரிசர்வ் டே இல்லை என ஐசிசி அறிவித்துள்ளது. ஒருவேளை மழையால் போட்டி ரத்தாகும்பட்சத்தில் இந்திய அணி இறுதிப்போக்கு முன்னேறும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 11, 2023, 04:45 PM IST
  • இந்தியா - நியூசிலாந்து முதல் அரையிறுதிப் போட்டி
  • மும்பை வான்கடேவில் இப்போட்டி நடைபெறுகிறது
  • மழையால் ரத்தானால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்?
இந்தியா - நியூசிலாந்து: அரையிறுதிப் போட்டி மழையால் ரத்தானால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்? title=

உலக கோப்பை 2023 தொடர் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதாலவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 15 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கு ரிசர்வ் டே இல்லை. ஒருவேளை போட்டி மழையால் ரத்தானால் என்னாகும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி இருந்தது.

மேலும் படிக்க | இந்தியா vs நியூசிலாந்து: 23 ஆண்டுகளில் 4 வெற்றிகள் மட்டுமே...! பகையோடு காத்திருக்கும் இந்தியா

இதற்கு விளக்கம் கொடுத்திருக்கும் ஐசிசி, உலக கோப்பை தொடரில் நடைபெறும் இரண்டு அரையிறுதிப் போட்டிகளுக்கும் ரிசர்வ் டே இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது. ஒருவேளை போட்டி மழையால் ரத்தாகும்பட்சத்தில் லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்திய அணிக்கு மிகவும் சாதமாக அமைந்துள்ளது. ஏனென்றால் உலக கோப்பை தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதல் இடத்திலும், நியூசிலாந்து அணி நான்காவது இடத்திலும் இருக்கின்றன. அதனடிப்படையில் முதலாவது அரையிறுதிப் போட்டியில் மழையால் ரத்தானால் இந்திய அணி தானாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டியில் மழை குறுக்கிட்டு ரத்தாகும்பட்சத்தில் தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் அரையிறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே வைக்கப்பட்டது. அதில் இந்தியா - நியூசிலாந்து அணிகளே மல்லுக்கட்டின. முதல் நாளில் மழை குறுக்கிட்டபோது, போட்டி இரண்டாவது நாளுக்கு மாற்றப்பட்டது. இதில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது. 

அதற்கு பழிதீர்க்கவே இந்திய அணி காத்திருக்கும் சூழலில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் என்னவாகும் என ஐசிசி இந்த விளக்கத்தை கொடுத்திருக்கிறது. இது இந்திய அணிக்கே சாதகமாக இருப்பதால் இந்திய அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோனி ரன் அவுட் ஆனதை இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியவில்லை. அதுதான் தோனி இந்திய அணிக்காக விளையாடிய கடைசி போட்டியும் கூட. அப்போது பெவிலியனில் நின்று கொண்டிருந்த ரோகித் சர்மா கண்கலங்கினார். இப்போது அவருக்கு அந்த போட்டியில் மன வருத்ததை போக்க ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை பயன்படுத்திக் கொள்வாரா? என்பது நவம்பர் 15 ஆம் தேதி தெரிந்துவிடும். 

மேலும் படிக்க  | கங்குலி போட்ட கண்டிஷன்.. வேற வழியில்லாமல் ஏத்துக்கிட்ட ரோகித் சர்மா...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News