Guduvancherry Encounter Update: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த அருங்கல் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று போலீஸ் வாகனம் மீது மோதி நின்றது. அப்போது காரை சுற்றி வளைத்த போலீசார் உள்ளிருந்த அடையாளம் தெரியாத நபர்களை பிடிக்க முயற்சி செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது காரில் இருந்த நான்கு நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் காரில்  இருந்து இறங்கி போலீசாரை வெட்ட முயற்சித்துள்ளனர். அப்போது உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை இடது கையில் ரவுடிகள் வெட்டிவிட்டு மீண்டும் தலையில் வெட்ட முயற்சித்துள்ளனர். அப்போது அவர் உடனடியாக குனிந்ததால் தொப்பியில் வெட்டு விழுந்து உள்ளது. இதில் நூலிழையில் அவர் உயிர் தப்பி உள்ளார்.


பின்னர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு ரவுடிகள் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். மற்ற இரண்டு ரவுடிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரவுடிகள் வெட்டியதில் படுகாயம் அடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். 


மேலும் படிக்க | ஜெயலலிதாவிற்கு செய்த சிசேரியனில் பிறந்தாரா ஓ பன்னீர்செல்வம்? - திண்டுக்கல் சீனிவாசன்


சிகிச்சையில் இருக்கும் அவரை தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று வெட்டு காயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மருத்துவரிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.


அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சங்கர் ஜிவால் கூறியதாவது, "கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் வாகனம் தணிக்கையின் போது கார் ஒன்றை நிறுத்த முயற்சித்துள்ளனர். அப்போது வேகமாக சென்று காவல் வாகனம் மீது மோதியது. அந்த காரில் இருந்து இறங்கி கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் காவலர்களை சிலர் தாக்க முயற்சித்துள்ளனர்.


இதில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனுக்கு கையில் வெட்டு காயம்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் சாதுரியமாக செயல்பட்டு ஏ ப்ளஸ் கேட்டகிரியில் உள்ள இரண்டு குற்றவாளிகளை சம்பவ இடத்திலேயே சுட்டுள்ளனர். தற்போது காயமடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் நலமுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.


தப்பிச்சென்ற மற்ற இருவரை தனிப்படைகள் அமைத்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. பொதுவாக தொடர்ந்து ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகளை ஒழிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும்" என்றார். 


மேலும் படிக்க | ராசிபுரத்தில் ஆண்கள் மட்டும் கொண்டாடிய வினோத திருவிழா! முழு விவரம்!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ