மத்திய அரசின் சார்பில் 2019 ஆம் ஆண்டில்,  கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக கொண்டு 2020-ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை, 2020 ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய கல்விக் கொள்கையின் கீழ், 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு, 10+2 என்ற தற்போதைய பாடமுறை மாற்றப்பட்டு, 5+3+3+4 என்ற அடிப்படையில் பாடமுறை மாற்றுதல் உள்ளிட்டவைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 


புதிய கல்விக் கொள்கை (NEP) தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் சென்று சேரும் வகையில், மத்திய அரசு அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தது.


2021-ம் ஆண்டுக்குள் கல்விகொள்கையை அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கையை அமல் செய்வது தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு, மாநில கல்வித்துறை செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்தட்து.


இதைத்தொடர்ந்து, நேற்று தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதிய கடிதத்தில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு பதிலாக, மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தமிழக அரசு எழுதிய இந்த கடிதத்திற்கு மத்திய அரசு எந்தவித பதிலும் கொடுக்கவில்லை


இந்நிலையில், மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெறும் புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. எனவே,  தமிழகத்தின் சார்பில் அதிகாரிகள் யாரும் அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறப்பட்டுள்ளது. 


ஏற்கெனவே புதிய கல்விக் கொள்கையை எக்காரணத்தைக் கொண்டும் தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Remdesivir ஒதுக்கீட்டை அதிகரித்த பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR