கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
கொரோனா தொற்றால் (Corona Virus) நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரை காக்க ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கான டிமாண்ட் பெரிது அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் இந்த மருந்தை வாங்க அரசு மருத்துவமனையில் முன்பு நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் ரெம்டெசிவிர் (Remdesivir) கொரோனா தடுப்பூசிகளின் அளவை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் எனக் கோரி, பிரதமர் மோடிக்கு (PM Narendra Modi) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கடிதம் எழுதி இருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, தமிழகத்திற்கு நாளொன்றிற்கு 20 ஆயிரம் என்ற அளவில் ரெம்டெசிவிர் வழங்கப்படும் என அறிவித்தது.
இந்நிலையில் தமிழகத்துக்கான ரெம்டெசிவிர் மருந்தின் ஒதுக்கீடு அளவை உயர்த்தியதற்காக, பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
I Thank @PMOIndia for increasing Tamil Nadu's Quota of Remdesivir on my request. The much needed supply would be helpful to the state in treating COVID patients,This would bring respite for thousands of patients' family members waiting in long queues.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 17, 2021
முன்னதாக, வரும் மே 18 ஆம் தேதி முதல், தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்து விற்பனை செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் மருத்துவமனைகள் தங்கள் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் விவரங்களோடு, மருத்துவ தேவைக்குறித்த விவரங்களை இணையத்தில் பதிவுசெய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.
ALSO READ | ரெம்டெசிவிர் மருந்தை வாங்க சென்னையில் அலை மோதும் மக்கள் கூட்டம்!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR