தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய அனல் மின் நிலைய கட்டுமான திட்டங்கள் மூலம் சுமார் 6,200 மெகா வாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று தமிழக மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் நிறுவப்பட்ட இரண்டு இரத்த சுத்திகரிப்புப் பகுதிகள், ஸ்கேன் மையம், ஆக்சிஜன் அறை உள்ளிட்டவற்றை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.


இதனிடையே தட்டாங்குட்டை ஊராட்சிக்குட்பட்ட எதிர்மேடு என்ற இடத்தில் கோவில் விழாவில் உணவு சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 50 பேரை அவர் சந்தித்து ஆறுதல் கூறினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிதாக 6,200 மெகா வாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்ய அனல் மின் நிலையங்கள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்தப் பணிகள் வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்றும் தெரிவித்தார். புதிய அனல் மின் நிலைய கட்டுமான திட்டங்கள் மூலம் சுமார் 6,200 மெகா வாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி 2021-க்குள் சென்னையில் உள்ள மின்பாதைகள் புதைவட மின்கம்பிளாக மாற்றப்படும் என தெரிவித்திருந்தார். மின் பளுவுக்கு ஏற்ற வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்து தரும் இடங்களில், துணை மின் நிலையம் அமைக்க அரசு முன் வரும் என்றும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.