புயல் தாக்கிய பகுதிகளில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு!
கஜா புயல் தாக்கிய பகுதிகளில் வரும் 30-ஆம் தேதி வரை அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்தலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது!
கஜா புயல் தாக்கிய பகுதிகளில் வரும் 30-ஆம் தேதி வரை அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்தலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது!
கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
புயல் தாக்கிய பகுதிகளில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவையே அடிப்படை தேவையாக இருப்பதால் அரசின் உதவியை எதிர்நோக்கியே மக்கள் உள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் உணவு, குடிநீர் போன்ற அத்தியாவச வசதிகள் கூட ஏதும் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், புயலில் உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது கஜா புயல் பாதித்த பகுதிகளில் வரும் 30-ஆம் தேதி வரை பொதுமக்கள் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்தலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.