தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நகர் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுக தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 40க்கு 40 வெற்றி பெற தொண்டர்கள், நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று முதல்வர் கூறினார். அதன் படி நமது நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்று தந்ததற்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்து நம்முடைய இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல், 22 0தொகுதிக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதனை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழ் புதல்வன் திட்டம்: யார் யாருக்கு மாதாமாதம் ரூ. 1000 கிடைக்கும்? - முதல்வர் ஸ்டாலின் பேச்சு


திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திமுகவிற்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் பேசி வருகின்றனர். இதை திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் முறியடிக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் மத்தியில் திமுகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மகளிர் உரிமை தொகைக்காக 1கோடியே 50 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 1லட்சத்து 18 ஆயிரம் மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்கள் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகை திட்டம் வருங்கால துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தான் 31 தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட தொடங்கியுள்ளது. திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளது. சில வாக்குறுதிகள் ஒன்றிய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்த வேண்டியுள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அதுவும் நிறைவேற்றப்படும் என்றார்.


காங்கிரஸ் வரவேற்பு


உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவதை காங்கிரஸ் பேரியக்கம் முழு மனதோடு வரவேற்கிறது என செல்வப்பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்திக்கையில், வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. தற்போது பாஜக, சுதந்திரத்தை அவர்கள் தான் வாங்கினார்கள் என்பது போல ஒரு தோற்றத்தை கொண்டு வருகிறார்கள்.


நாடு சுதந்திரம் அடைந்ததற்கு காங்கிரஸ் பேரியக்கமும் பொதுமக்களின் தியாகமும் கலந்துள்ளது. இதனை பாஜக பொதுமக்களிடத்தில் தவறாக சொல்கிறது. நாளை முதல் தொடர்ந்து ஒவ்வொரு வட்டங்கள் மற்றும் மாவட்டம் தோறும் தேசியக்கொடி ஏந்திய காங்கிரஸ் தொண்டர்கள் சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸின் பங்கு என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்கி சொல்வார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக அரசின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. தற்போது புலன் விசாரணை நடைபெற்று வருவதால் அதைப்பற்றி அதிகமாக பேச விரும்பவில்லை. யார் யாரோ தற்பொழுது இந்தியாவில் முதலமைச்சராக உள்ளார்கள். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதில் எந்த தவறும் கிடையாது. காங்கிரஸ் பேரியக்கம் அதை முழு மனதோடு வரவேற்கிறது. ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் அவர்கள் தொண்டர்கள் மீது போடப்பட்ட வழக்கை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.


மேலும் படிக்க | உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகும் தேதியை பேச்சுவாக்கில் சொன்ன அமைச்சர் ராஜகண்ணப்பன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ