உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகும் தேதியை பேச்சுவாக்கில் சொன்ன அமைச்சர் ராஜகண்ணப்பன்

Udhayanidhi Stalin : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராக பொறுபேற்க இருப்பதை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிகாரப்பூர்வமாக இன்று உறுதிபடுத்தியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 9, 2024, 02:52 PM IST
  • துணை முதலமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்
  • ஆகஸ்ட் 19 ஆம் தேதி பொறுபேற்பதாக தகவல்
  • ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகும் தேதியை பேச்சுவாக்கில் சொன்ன அமைச்சர் ராஜகண்ணப்பன் title=

Udhayanidhi Stalin : விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர் பொறுப்பு ஏற்கலாம் என்ற தகவல் அண்மைக்காலமாகவே வெளியாகி வந்தது. ஆனால் எப்போதும் என்பது மட்டும் சஸ்பென்ஸாக இருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல இருக்கும் நிலையில், அதற்கு முன்பாக இந்த புரமோஷன் இருக்கலாம் என்றும் தலைமை செயலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கூட இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, எந்த பொறுப்பு வந்தாலும் அதனை திறம்பட செய்ய தயாராக இருக்கிறேன் என கூறினார். ஆனால் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவது குறித்து எந்த பதிலும் சொல்லாமல் சிரித்தவாறே சென்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து அண்மையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதுகூட, உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர, அது பழுக்கவில்லை என கூறினார். இதனால், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் நியமனம் இப்போதைக்கு இல்லை என்றே எல்லோரும் நினைத்தனர். ஆனால், வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க இருப்பதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார். 

மேலும் படிக்க | தமிழ் புதல்வன் திட்டம்: யார் யாருக்கு மாதாமாதம் ரூ. 1000 கிடைக்கும்? - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கோவை மாவட்ட சுற்றுப் பயணத்தில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் தொடக்க விழா ராமநாதபுரத்திலும் நடைபெற்றது. அமைச்சர் ராஜகண்ணன் இந்த விழாவுக்கு தலைமை தாங்கினார். அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், " அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி துணை முதலமைச்சராக பொறுபேற்கிறார்" என்ற பிரேக்கிங் நியூஸை பேச்சுவாக்கி திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கூறினார். அத்துடன் உதயநிதி ஸ்டாலின் பெயரை குறிப்பிடும்போதெல்லாம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்றே அழைத்தார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப் பயணம் செல்வதற்கு முன்பு தமிழ்நாடு அமைச்சரவையில் பெரிய மாற்றம் இருக்கும் என்றும் சொல்லப்பட்ட நிலையில், அது நடக்க இருப்பதும் இப்போது உறுதியாகியுள்ளது. சில மூத்த அமைச்சர்களின் இலாக்காக்களே மாற்றப்பட இருக்கிறது. தங்கம் தென்னரசு, நேரு, முத்துசாமி, டிஆர்பி ராஜா உள்ளிட்டோரின் துறைகள் மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மீண்டும் நிதித்துறை ஒதுக்கப்பட வாய்ப்பும் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

மேலும் படிக்க | தலையில் பால் குடத்தோடு மியா கலிஃபா... ஆடி மாதத்தில் அலப்பறை செய்யும் காஞ்சி பாய்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News