தமிழ் தொலைக்காட்சி சீரியல் பிரியர்களுக்கு ஒரு அருமையான செய்தி காத்திருக்கிறது...
வரும் மே 31-ஆம் தேதி முதல் சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்புகளை 60 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினருடன் தொடர தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
வரும் மே 31-ஆம் தேதி முதல் சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்புகளை 60 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினருடன் தொடர தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக கடந்த மே 21 அன்று அரசாங்கம் பிறப்பித்த உத்தரவின்படி, நகர்ப்புறங்களில் கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர, சில கிராமப்புறங்களில் வெளிப்புற படபிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் படப்பிடிப்பின் போது 20 நபர்கள் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது இந்த கட்டுபாடுகளில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.,
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை துவங்குவதற்கு 21.5.2020 அன்று அனுமதி அளிக்கப்பட்டது.
அனுமதி அளிக்கப்பட்ட அதிகபட்ச 20 நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு படப்பிடிப்பை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும், இதனை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், மாண்புமிகு செய்தித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை 31.5.2020 முதல் நடத்த தற்போது அனுமதி அளிக்கப்படுகிறது.
சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடமும் ஒவ்வொரு சின்னத்திரை தொடரின் முழுப்படப்பிடிப்பிற்கும் ஒரு முறை மட்டும் முன் அனுமதி பெறுதல் வேண்டும்.
சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அதனை உறுதி செய்து கொண்டு, படப்பிடிப்புகள் நடத்திட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.