கடலோர பகுதியில் மீனவர்கள் வரும் ஜூன் 4, வரை கடலுக்கு செல்ல தடை...
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி வடக்கு திசையில் நகரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடலோர பகுதியில் மீனவர்கள் வரும் 04.06.2020 வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி வடக்கு திசையில் நகரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடலோர பகுதியில் மீனவர்கள் வரும் 04.06.2020 வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் RB உதயகுமார் தெரிவிக்கையில்., தென்மேற்கு பருவமழை கேரளாவிலும், மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய தமிழக மாவட்டங்களிலும் துவங்கியுள்ளது.
READ | புயல் எச்சரிக்கை செய்தி அறியாது, கடலில் தவிக்கும் 800 மீனவர்கள்!...
தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் சென்னை, காஞ்சி,திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி,சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை புயலாக மாறி வடக்கு திசையில் நகரும். இலட்சத்தீவு, கேரள கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு (ம) அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடகா, கோவா கடலோர பகுதிகளில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
எனவே, இந்த கடலோர பகுதியில் மீனவர்கள் வரும் 04.06.2020 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.
READ | பாரம்பரிய படகுகள் மட்டும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லலாம்... -tnGovt
முன்னதாக அரேபிய கடலில், நிசர்கா சூறாவளியைக் கையாள்வதற்கான ஆயத்தங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்களன்று (ஜூன் 1, 2020) NDMA, NDRF, IMD மற்றும் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளுடன் உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். குஜராத் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர்கள், விஜய் ரூபானி மற்றும் உத்தவ் தாக்கரே மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையு பிரபுல் படேல் ஆகியோரும் அமித் ஷா உடனான வீடியோ கன்ப்ரசிங்கில் கலந்துக்கொண்டனர்.
இந்த சூறாவளி மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டாமன் மற்றும் டையுவின் சில பகுதிகளை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூறாவளியின் தாக்கம் தமிழகம் வரை இருக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.