கோவையில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி...
காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு பெண்களிடையே ஏற்படுத்தும் விதமாக, கோவையிலுள்ள தனியார் வணிகவளாகத்தில் கோவை மாநகர காவல்துறை துறையினர் பெண்கள் மத்தியில் விரிவாக எடுத்துரைத்தனர்.
காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு பெண்களிடையே ஏற்படுத்தும் விதமாக, கோவையிலுள்ள தனியார் வணிகவளாகத்தில் கோவை மாநகர காவல்துறை துறையினர் பெண்கள் மத்தியில் விரிவாக எடுத்துரைத்தனர்.
மேலும் காவலன் செயலியினை பதிவிறக்கம் செய்யும்முறையை பற்றியும் இந்த நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறை சார்பில் காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு கோவை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக கோவையில் வணிகவளாகங்கள் மற்றும் கல்லூரிகள் என பல இடங்களில் செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. செல்போன் சிக்னல் இல்லாத இடங்களிலும் குறுஞ்செய்தி கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளில் பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கோவை மேற்கு மாநகர காவல் துறை அதிகாரிகள், தனியார் வணிகவளாகத்திற்கு வரும் பெண்களுக்கு காவலன் செயலினை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அங்கு வரும் பெண்களின் செல்போன்களில் செயலியை பதிவிறக்கம் செய்தும் கொடுத்தனர்.
இதுகுறித்து ஆய்வாளர் கனகசபாபதி கூறும்போது, இந்த செயலி முற்றிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறை அதிகாரிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். மாநகர குற்றப்பிரிவு இணை ஆணையர் உமா, கோவை மாநகர மேற்கு சட்ட ஒழுங்கு துணை ஆணையர் ஸ்ரீராமாசந்திரன், காவல் ஆய்வாளர்கள் கனகசபாபதி, பி ரபாதேவி, சாந்தி, பர்வீனா பானு உள்பட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.