பணியிட மாறுதல் கிடைத்தும் அவதிப்படும் 1,127 போலீசார்கள்..!
தமிழகம் முழுவதும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் அந்த உத்தரவு அமல்படுத்தப்படாமல் ஆயிரத்து 127 போலீசார் தவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக டிஜிபியாக பொறுப்பேற்ற சைலேந்திரபாபு, பொதுமக்களின் பிரச்சினையோடு சேர்த்து காவலர்களின் நலனிலும் கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாக அண்மையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சரக காவல் துணைத் தலைவர், மண்டல காவல்துறை தலைவர் என 3 நிலைகளில் காவல் துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
அதில், காவலர்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட்டது. அதன்படி பல்வேறு சூழல் காரணமாக பணியிட மாறுதல் கேட்ட 1,127 காவலர்களுக்கு அவர்கள் கேட்ட இடத்துக்கே டிஜிபி சைலேந்திரபாபு பணியிட மாறுதல் வழங்கினார்.
ஆனால், இந்த உத்தரவை மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் நடைமுறைப்படுத்தாமல் உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், 3 மாதமாகியும் பணியிட மாறுதல் வழங்கப்பட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் விரக்தியுடன் இருப்பதாகவும், சென்னையில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியிடமாறுதல் வந்தும் சொந்த ஊருக்குச் சென்று பணி செய்ய முடியாமல் தவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ஆதரவற்ற குழந்தையை அரவணைக்கும் பெண் போலீஸ்! வைரலான வீடியோ!
இந்நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கு முன்னர் பணியிட மாறுதல் வழங்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்தால் தங்களது பிள்ளைகளை கல்வி நிறுவனங்களில் சேர்க்க வசதியாக இருக்கும் எனக் காவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் டிஜிபி தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | மூதாட்டிக்கு செருப்பு சரி செய்து அணிவித்த டிஎஸ்பி, இணையத்தில் வைரலாகும் போட்டோ
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR