விரைவில் வர இருக்கும் போட்டியில் முதல் நாற்காலியை ஏற்கனவே அரசியல் வாரிசு குறிவைத்து இருக்கும் நிலையில், சினிமா வாரிசும் அதற்கு போட்டியாக வர இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் வரப்போவது நிச்சயம். களத்திலும், சோஷியல் மீடியாவில் இந்த மோதல் உக்கிரமாக இருக்கும் என்றாலும், அரசியல் வாரிசு இந்த இரண்டையும் ஏற்கனவே பார்த்த அனுபவம் கொண்டவராக இருக்கிறார். சினிமா வாரிசு புகழ் வெளிச்சத்தில் இருந்துவிட்டு, கள அரசியலுக்குள் இப்போது தான் வரப்போகிறார். இது அவருக்கு முழுக்க முழுக்க புதிய இடமாக இருக்கப்போகிறது. களத்தில் பல அசிங்கங்களையும், சங்கடங்களையும் எதிர்கொண்டாக வேண்டும். அதற்கு சினிமா வாரிசு எப்படி ரியாக்ட் செய்யப்போகிறார் என்பதை பொறுத்தே அவருக்கான இடம் விரிவடையுமா? சுருங்கிப்போகுமா? என்பது தெரியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கோயம்புத்தூர் மக்களே கொண்டாட்டத்திற்கு தயராகுங்கள்.. இதோ கோவை விழா 2024


அதனை பார்க்க எல்லோரும் ஆர்வமாக இருக்கும் நிலையில், சோஷியல் மீடியா தளத்தில் இருவருமே செம ஸ்டிராங்க். அரசியல் வாரிசுக்கு மிஞ்சிய படையே சினிமா வாரிசுக்கு இருக்கிறது. அதனால், சோஷியல் மீடியா பிரச்சாரத்தில் ஒருவரையொருவர் விமர்சிக்க இரு தரப்பும் எந்த எல்லைக்கும் செல்லும். சூசகமாகவே விமர்சித்தாலும், இண்டர்நெட் உலகம் யாரை யாரோடு தொடர்புபடுத்தி பேசுகிறார்கள் என்பதை உடனடியாக கேட்ச் செய்துவிடும். அந்தளவில் பார்க்கும்போது, முதல் நாற்காலிக்கான போட்டி நேரத்தில் இருவரின் சினிமா அந்தபுரத்து சமாச்சாரங்கள் அதிகளவில் பரப்பப்படுமோ? பேசப்படுமோ என்ற பேச்சு எழுந்திருக்கிறது. 


இப்போது இருவருக்கும் இருக்கும் இமேஜை உடைக்க இந்த ஆயுதமும் பிரதானமாக முன்னெடுக்கப்படும். அதனால், இருவருடன் நடித்த பல ஸ்டார் நடிகைகளின் பெயர்கள் எல்லாம் தேவையில்லாமல் சோஷியல் மீடியா சண்டையில் இழுக்கப்பட்டு, இரு தரப்பும் தரக்குறைவாக விமர்சித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்கிறது அரசியல் வட்டாரம். அது நல்லதல்ல என்று சொன்னால் கூட, அந்த பிரச்சாரத்தை இருவராலுமே தடுக்க முடியாது என்பதே நிதர்சனம். அது அரசியல் வாரிசுக்கும், சினிமா வாரிசுக்கும் தர்ம சங்கடமாக கூடபோகலாம் என்றாலும், ஒரு தரப்பு விமர்சிக்கும்போது, இன்னொரு தரப்பு நிச்சயமாக அமைதியாக இருக்காது. அதனால், முதல் நாற்காலிக்கான போட்டியில் அரசியல் வாரிசு மற்றும் சினிமா வாரிசு ஆகியோரின் அந்தபுரத்து சமாச்சாரங்கள் சோஷியல் மீடியாவை ஆக்கிரமிக்கப்போகிறது என்கிறது அரசியல் வட்டாரம். 


இவர்கள் இருவரையும் ஒருசேர இந்த விஷயத்தைக் கொண்டு தாக்குதல் நடத்த பூ மற்றும் இலை தரப்பும் தயாராகவே இருக்கும். பூ தரப்பு இப்படியான விஷயங்களை கையாள்வதில் கொஞ்சம் நிபுணத்துவம் கொண்ட படை. உட்கட்சி ஆட்களையே பொறிவைத்து பிடித்து, ஓரங்கட்டிய டீம் என்பதால் முதல் நாற்காலிக்கான போட்டியின்போது சினிமா வாரிசு, அரசியல் வாரிசின் பிம்பத்தை உடைக்க, பூ தரப்பு சோஷியல் மீடியாவில் எடுக்கப்போகும் முதல் ஆயுதமே அந்தபுரத்து சமாச்சாரமாக தான் இருக்கும் என ஒரு தரப்பு சொல்கிறது. இதனால், முதல் நாற்காலி போட்டிக்கு முன்பாக பல அந்தபுரத்து விஷயங்களை வெளியாக வாய்ப்பு இருக்கிறது.  


மேலும் படிக்க | திருவொற்றியூர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்த வீடியோ வைரல்! கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ