அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 70 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நெருக்கடி இலங்கையில் நிலவிவருவதால், அந்நாட்டின்பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து இலங்கையில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமரே பதவிவலகும் அளவுக்கு மிக மோசமான அரசியல் சூழலில் இலங்கை இருந்துவருகிறது. இதனிடையே, இலங்கைக்குப் பொருளாதார ரீதியாகவும், மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசு வழங்கி உதவும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சட்டசபையில் சிறப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.


                                                       


குறிப்பாக, ரூ. 80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான 137 மருந்துப் பொருட்கள் ரூ.15 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் உள்ளிட்டவற்றை இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் வழங்க இருப்பதாகத் தெரிவித்தார்.


மேலும் படிக்க | Srilankan Tamils vs Navy: இந்திய அகதிகளாக தமிழர்கள் செல்வதைத் தடுக்கும் இலங்கை கடற்படை


 


அதற்காக, இலங்கைக்குப் பொருட்கள் அனுப்ப ஏதுவாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு இடங்களிலிருந்தும் பொருட்களை அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இம்மாத இறுதிக்குள் பொருட்கள் அனுப்பப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் திருவண்ணாமலை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து இலங்கைக்கு 500 டன் ஆவின் பால் பவுடர் அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை அருகே, அரிசி வைக்கும் கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | தமிழக முதல்வருக்கு இலங்கை எம்.பி நன்றி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR