டாஸ்மாக் ஊழியர் வீடியோ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடங்களில் டாஸ்மாக் ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரிடம் கூடுதலாக 10 ரூபாய் கேட்டு வாக்குவாதம் செய்ததுடன், அமைச்சர் செந்தில் பாலாஜியையும் தரக்குறைவாக பேசிய வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில், ’இது Horlicks Bournvira இல்ல, நீ எடுத்துக்கோ வீடியோ, இந்த ஒரு வாரம் தான நீ இப்படி பண்ற, மத்த நாள் எல்லாம் நீ குவாட்டருக்கு 10 ரூபாய் அதிகமா கொடுத்து தான வாங்கின்னு போயிற்றுந்த. இப்போ என்ன உனக்கு பிரச்சனை.கொடுக்குரத வாங்கிட்டு போ’ என மிரட்டுகிறார். மேலும், குவாட்டருக்கு 10 ரூபாய்க்கு மேல வச்சி தான் விற்பேன். நீ நல்லா வீடியோ எடுத்துக்கோ என்று திமிராகவும் அந்த வீடியோவில் டாஸ்மாக் ஊழியர் பேசியிருந்தார். 


கூடுதல் விலை கொடுத்து வசூல்


இந்த வீடியோவானது சென்னையை அடுத்த பம்மல் பகுதியில் உள்ள திருநீர்மலை சாலை காமராஜ புரம் பகுதியில்  இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் எடுக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள மதுப்பிரியர் ஒருவர் மதுபாட்டில்களை வாங்க தனது  நண்பர்களோடு சென்றுள்ளார். அப்போது Royal Challenge Half, இரண்டு பாட்டில்களை தருமாறு கேட்டுள்ளார். இரண்டு பாட்டிலின் MRP விலையானது 480 ரூபாய் ஆகும். அந்த மதுப்பிரியர் 500 ரூபாயை ஊழியரிடம் கொடுத்துள்ளார். அதன் பின்பு ஊழியர்  மீதமுள்ள 20 ரூபாயை தரவில்லை. MRP விலை 480 ரூபாய் நான் கொடுத்தது 500 ரூபாய் மீதம் எனக்கு 20 ரூபாய் நீங்கள் தர வேண்டும். அதை தாருங்கள் என்று மதுப்பிரியர் கேட்டதும். அதெல்லாம் தர முடியாதுங்க. எக்ஸ்ட்ராவா 10 ரூபாய் வைத்து தான் விற்ப்போம் என்று கூறியதும், ஆத்திரமடைந்த மதுப்பிரியரோ தனது செல்போனை எடுத்து வீடியோ எடுத்துள்ளார்.


மேலும் படிக்க | அம்பத்தூர் ஆவின் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பாதிப்பு!


அமைச்சருக்கு விளாசல் 


அப்போது கடை ஊழியர் நல்லா வீடியோ எடுத்துக்கோ இவ்ளோ நாள் எவ்ளோ கொடுத்து வாங்குன.., இப்போ இந்த ஒரு வாரம் தான் இப்படி பண்ணிட்டு இருக்கீங்க. இது Horlicks Bournvira இல்ல, எடுத்துக்கோ நீ வீடியோ, இந்த ஒரு வாரம் தான நீ இப்படி பண்ற, மத்த நாள் எல்லாம் நீ 10 ரூபாய் அதிகமா கொடுத்து தான வாங்கின்னு போயிற்றுந்த. இப்போ என்ன உனக்கு பிரச்சனை.கொடுக்குரத வாங்கிட்டு போ. அவன் மாட்டிக்கிட்டான் அதனால் தான் எங்களையும் இப்படி மாட்டி விட்டுட்டான் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியை தவறான வார்த்தையால் திட்டினார் அந்த டாஸ்மாக் ஊழியர். இவை அனைத்தும் மதுப்பிரியரின் செல்போனில் ரெக்கார்ட் செய்ய பட்டு சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.


டாஸ்மாக் ஊழியர் செந்தில் சஸ்பெண்ட்


இந்நிலையில், வாடிக்கையாளரிடம் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக கேட்டதோடு வாடிக்கையாளரை அவதூறாக பேசி அரசுக்கு களங்கும் விளைவிக்கும் படி செயல்பட்ட டாஸ்மாக் ஊழியர் செந்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், ஜிஎஸ்டி வரி உடன் சேர்த்து 11,800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து வேறு ஒரு ஊழியர் அங்கு பணியில் அமர்த்தபட்டார். மாவட்ட மேலாளர் ஷாம் சுந்தர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


மேலும் படிக்க | CM Stalin Delta Visit: மின் கட்டண உயர்வுக்கு யார் காரணம்? - முதலமைச்சர் ஸ்டாலின் பதில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ