கோவையில் பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமான பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை உக்கடம் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி வியாழக்கிழமை மாலை  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி முதலில்  படித்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததன் காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மாணவி,  தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். 


இதனையடுத்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல் துறையினர், இயற்பியல்  ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். 


ALSO READ | கோவை மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர்.எஸ்.புரத்தில் பள்ளி முற்றுகை போராட்டம்


இந்நிலையில் போலீஸ் விசாரணை வளையத்தில் இருந்த ஆசிரியர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை கோவை  அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீசார்  உடல் பரிசோதனை செய்த பின்னர் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தபட்டு  கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மாணவி தற்கொலை செய்வதற்கு முன்னால் எழுதியுள்ள கடிதத்தை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கவில்லை எனவும், அந்த கடிதத்தில் 3 பேரை மாணவி குறிப்பிட்டு உள்ளதாகவும் ஆசிரியரை மற்றவர்களை போலீசார் காப்பாற்ற முயல்வதாகவும் உறவினர்கள் குற்றச்சாட்டடை  கூறுகின்றனர்.


கோவை கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரனின் 17 வயது மகள் பொன் தாரணி, 11ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்த நிலையில், அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி அம்மணியம்மாள் பள்ளிக்கு மாறினார். அந்த பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு; பெண் எஸ்.பி நேரில் ஆஜராகி சாட்சியம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR