மனிதநேய விருதுகள் 2022 வழங்கும் நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள ப்ரிம்ரோஸ் ஹவுஸில் நடைபெற்றது.  சமூக ஆர்வலரும் அரசியல்வாதியுமான அப்சரா ரெட்டியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், 
கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக சேவையாற்றிவர்களுக்கு மனிதநேய விருதுகளை வழங்கினர்.  மேலும் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.  மனித நேயம் விருதுகள் 2022 விருதுகள், குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பணியாற்றும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க: கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு: உயர்க்கல்வித்துறை


பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு தொழில் மற்றும் தொழில் திறன்களைக் கண்டறிய விருதுகள் வழங்கப்பட்டன.  விருது பெற்றவர்கள் 1.மருத்துவர் உஷா ஸ்ரீராம், 2.திரு.கன்னிகோவில் ராஜா,  3.திரு செல்வராஜ், அருணாச்சலம், 4.திரு. குர் ஆர்யேஹ் எமி, 5. K. பொன்னி,  6.பிரியா பாபு, 7.திரு.சந்திரன், 8.B.செந்தமிழ் செல்வி, 9.R.நைரா, 10.ரூபா செல்வநாயகி உள்ளிட்டோருக்கு மனிதநேய விருதுகள் வழங்கப்பட்டன.


விருது வழங்கும் நிகழ்ச்சி குறித்து பேசிய அப்சரா ரெட்டி


தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான விருதுகள் பிரபலமான முகங்கள் மற்றும் கவர்ச்சியான வேலைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையில்  மக்களின் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயல்படும் சமூகங்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளை உருவாக்க  முயற்சியில் உண்மையான கடின  உழைப்பை வழங்குகின்றவர்களுக்கு இந்த விருதுகள்  வழங்கப்படுகின்றன.  அதிக பிரபலம் இல்லாத  தன்னார்வலர்களின் துணிச்சலான பணியை  அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும் இது போன்ற விருதுகள் வழங்குவதன் மூலம் ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், " குழந்தைகள் எப்பொழுதும் தங்களது மகிழ்ச்சியை விட்டுக்கொடுக்க கூடாது வாழ்க்கை என்பது வாழ்வதற்காக மட்டுமே முடித்து வைப்பதற்கு அல்ல.  குழந்தைகள் கண்ணாடி கோப்பையை போன்றவர்கள் குறிப்பாக பெண் குழந்தைகளை ஆசிரியர்கள்  கவனமுடன் கையாள வேண்டும்.  பெண் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் மற்றும் தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க வேண்டும்.   குழந்தைகள் சாதிக்க பிறந்தவர்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ளவே கூடாது" என்று கூறினார்.


மேலும் படிக்க: CBSE 2023: 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ