உஷார் மக்களே... தமிழகத்தில் அதிகரிக்கப்போகும் வெயில்
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு வெயிலின் அளவு 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்றனர். இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியிருக்கின்றனர். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு மக்கள் தங்களால் முடிந்தவைகளை செய்துகொள்கின்றனர்.
இந்நிலையில் அடுத்த மூன்று நாள்களுக்கு 2லிருந்து 3 டிகிரி செல்சியஸ்வரை வெயிலின் அளவு அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், “மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பம் அதிகம் இருக்கும் காரணத்தினால், மக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க | மாமூல் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்த ரவுடியை வெட்டிய பழக்கடைக்காரர்
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 5 வருட சாதனை ஒரே ஆண்டில்..என்ன செய்தது திமுக.?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR