Tenkasi Tamil Nadu Lok Sabha Election Result 2024 : தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற்றது. 7 கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தல், கடைசியாக ஜூன் மாதம் 1ஆம் தேதி நடைப்பெற்று முடிவடைந்தது. இந்த நிலையில், நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தேர்தல் முடிவுகள் வரவிருக்கின்றன. இதில், தமிழகத்தின் 37வது சட்டமன்ற தொகுதியாக இருக்கும் தென்காசியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்து இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்காசி தொகுதி-வரலாறு:


தென்காசி தொகுதி தென் மாவட்டத்தில் உள்ள தனித்தொகுதி ஆகும். இது, பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதி. இந்த தொகுதி 30 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆண்ட கோட்டையாக இருந்தது. இதில், 1957ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை ஒன்பது முறை காங்கிரஸ் கட்சி வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அருணாச்சலம், 6 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 


90களுக்கு பிறகு, இந்த தொகுதியில் மாற்றம் ஏற்பட்டது. 1996ஆம் ஆண்டில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அப்போது அருணாசலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து நடைப்பெற்ற மூன்று தேர்தல்களிலும் அதிமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றிருக்கின்றன.


தென்காசி தொகுதி 2019 மக்களவை தேர்தலில் வென்றவர்கள்:


கடந்த 2019ஆம் ஆண்டின் மக்களவை தேர்தலில் திமுக கட்சி முதல் முறையாக போட்டியிட்டது. போட்டியிட்ட முதல் முறையே, அக்கட்சியின் வேட்பாளர் தனுஷ் எம்.குமார் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமியை விட இவர் 1,20,286 வாக்குகள் அதிகம் பெற்றி வெற்றிகண்டார். 


தென்காசி உள்ள சட்டசபை தொகுதிகள் விவரம்


தென்காசியில் மொத்தம் ஆறு தொகுதிகள் உள்ளன. அவை தென்காசி, கடையநல்லூர், இராஜபாளையம், சங்கரன்கோயில், வாசுதேவ நல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியவை ஆகும். இதில், கடைசி மூன்று தொகுதிகல் தனித்தொகுதிகல் ஆகும். 


மேலும் படிக்க | NDA vs INDIA: பிரதமரை தீர்மானிக்கும் 'இந்த 6 மாநிலங்கள்' - நாளைக்கு இதுதான் ரொம்ப முக்கியம்


தென்காசி தொகுதி வாக்காளர் விகிதம்:


தென்காசியில் மொத்தம் 15,16,183 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் மட்டும் 7,42,158 பேர். பெண் வாக்காளர்கள் 7,73,822 பேர், மூன்றாம் பாலினத்தவர் 203 பேர் ஆவர். நடந்து முடிந்த தேர்தலில் இந்த தொகுதியில் மொத்தம் 67.65% பேர் வாக்களித்திருந்தனர். 


மக்களவைத் தேர்தல் 2024: தென்காசி தொகுதியில் போட்டியிட்டவர்கள்


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களின் விவரம்:


>திமுக கட்சி சார்பாக ராணி ஸ்ரீ குமார் போட்டியிட்டார்
>அதிமுக+புதிய தமிழகம் கூட்டணி கட்சி சார்பாக, கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.
>பாஜக+தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பாக ஜான் பாண்டியன் போட்டியிட்டார்.
>நாம் தமிழர் கட்சி சார்பாக சி.ச.இசை மதிவாணன் போட்டியிட்டார்.


இந்த தேர்தலில் 15 பேர் சுயேட்சி வேட்பாளர்களாக இருந்தனர். இருப்பினும் திமுக, அதிமுக, பாஜக கட்சியை,நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் முக்கிய வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர். இதில், திமுக வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | உங்கள் தொகுதி வாக்கு எண்ணிக்கையை அப்டேட்டாக பார்த்து தெரிந்து கொள்வது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ