உங்கள் தொகுதி வாக்கு எண்ணிக்கையை அப்டேட்டாக பார்த்து தெரிந்து கொள்வது எப்படி?

லோக்சபா தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு தொகுதியின் நிலவரம் குறித்து அப்டேட்டாக தெரிந்து கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 3, 2024, 02:09 PM IST
  • இந்திய லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள்
  • நாளை காலை 8 மணி முதல் வெளியாகிறது
  • தொகுதி வாரியாக முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?
உங்கள் தொகுதி வாக்கு எண்ணிக்கையை அப்டேட்டாக பார்த்து தெரிந்து கொள்வது எப்படி? title=

அடுத்த 5 ஆண்டுகளுக்கான நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் இந்தியாவின் லோக்சபா 2024 தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகயுள்ளது. 140 கோடி இந்திய மக்களின் எதிர்காலத்தை இந்த தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும். நாளை காலை சரியாக 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை, அனைத்து தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடையும் வரை தொடரும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணிக்குப் பிறகே வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. 543 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 7வது கட்ட தேர்தலுடன் ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 

மேலும் படிக்க | Exit Poll: மேற்கு வங்கத்தில் யாருக்கு அதிக இடம் கிடைக்கும்... ரவீந்திரன் துரைசாமி கணிப்பு!

வாக்குகள் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்கு எந்திரங்களும் அந்தந்த தொகுதிகளுக்குப்பட்ட பகுதியில் துணை ராணுவப்படை மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இந்த கண்காணிப்பில் ஒரு அங்கமாக இருந்து வந்தனர். நாளை காலை முறையாக அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வாக்குப்பெட்டிகளின் சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மேஜையில் வைக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. ஒவ்வொரு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்குகள் அதிகம் அல்லது குறைவாக பதிவாகியிருந்தால் தேர்தல் அதிகாரிகளிடம் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முறையிட்டு, அந்த குளறுபடிகள் சரி செய்யப்பட்ட பின்னர் வாக்குகள் எண்ண அனுமதிக்கப்படும். 

வாக்கு எண்ணிக்கை தொடர்பான அனைத்து லேட்டஸ்ட் அப்டேட்களும் இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வ இணையபக்கமான results.eci.gov.in என்ற பக்கத்தில் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும். இந்தியா முழுவதும் நிலவரம், மாநில வாரியாக நிலவரம், தொகுதிவாரியாக நிலவரம் என தனித்தனியாக இந்த இணையப் பக்கத்தில் இருக்கும்.  ஒருவேளை உங்கள் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மற்றும் முன்னிலை நிலவரம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் results.eci.gov.in என்ற பக்கத்துக்குசென்று மாநிலம் மற்றும் தொகுதி பெயரை தேர்வு செய்து, அதனுடைய அதிகாரப்பூர்வ நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். 

ஒவ்வொரு வேட்பாளர் பெற்றிருக்கும் வாக்குகள் எண்ணிக்கை தெளிவாக காண்பிக்கப்படும். எந்த வேட்பாளர் முன்னணியில் இருக்கிறார், யார் பின்தங்குகிறார் என்பது ஒவ்வொரு சுற்றுகளின் முடிவிலும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரியப்படுத்தப்படும். வாக்கு எண்ணிக்கை முடிவுகளைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையத்தின் அப்டேட்கள் மட்டுமே நம்பகமானவை, இறுதியானவை என்பதை கவனத்தில் கொள்க. 

மேலும் படிக்க | அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News