வேலூரில் தமிழக வெற்றி கழகம் கட்சியின், வேலூர் சட்டமன்ற தொகுதியின் புதிய அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்று விழா மாசாக திறக்கப்பட்டது. விஜய் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


வேலூர் மாநகர் மாங்காய்மண்டி அருகே, தவெக கட்சியின் புதிய அலுவலகம் அக்கட்சியின் நிர்வாகி இம்தியாஸ் தலைமையில் தயார் செய்யப்பட்டது. அலுவலகத்தை வேலூர் மாவட்டத் தலைவர் வேல்முருகன் ரிப்பன் வெட்டி, கட்சிகொடியேற்றி திறந்து வைத்தார் பின்னர் ஏழை எளிய பெண்களுக்கு புடவைகள் வழங்கினர். அதோடு ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கி மாஸ் காட்டினர். இவ்விழாவின் இறுதியில் 200 க்கும் மேற்பட்ட விஜய் கட்சியினர் கலந்து கொண்டனர் பின்பு, 27-ம் தேதி நடக்கும் த.வெ.க மாநாடுக்கு செல்வதற்கு பயண ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.


மேலும் படிக்க | உதயநிதி ஸ்டாலின் முதல்வரானலும் எங்களுக்கு கவலை இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்!


கோவையில் தவெக போஸ்டர்


நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகின்ற 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. தமிழக அரசியல் களத்தில் இந்த மாநாடு பொதுமக்களால் பெரிதும் உற்று நோக்கப்படுகிறது. விக்கிரவாண்டியில் இம்மாநாட்டிற்கான பணிகள் மும்மரமாக நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாடு குறித்து பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணிகளை தமிழக வெற்றிக்கழகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் விஜயின் பிரபல திரைப்பட வசனமாக வாத்தி Coming என்ற வாசகத்தை குறிப்பிட்டு பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 


அந்த போஸ்டரில் வாத்தி CoMing என குறிபிட்டு Coming யில் உள்ள CoMing என்ற இரண்டு எழுத்துக்கள் மட்டும் பெரிய எழுத்துக்களாக CM என முதல்வர் பதவியை குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது. மேலும் விக்கிரவாண்டியில் மாற்றத்தை நோக்கி... முதல் மாநில மாநாடு என குறிப்பிட்டு தமிழ்நாடு மாதிரி படத்தில் விஜயின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் அவிநாசி சாலை மேம்பாலம், அண்ணாசிலை உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டப்பட்டுள்ளன.


மாநில செயலாளர் உயிரிழப்பு


தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளராக இருந்து வந்தவர் சரவணன் (47). தமிழக வெற்றி கழத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்தின் நம்பிக்கையானவராவும் இருந்தார். இதன் காரணமாக நடிகர் விஜய் சார்ந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் சரவணன் முக்கிய பங்கு வகிப்பார். மேலும் வரும் 27-ஆம் தேதியன்று விக்கரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் மாநாட்டு வேலைகளையும் கவனித்து வந்தார். நேற்றும் விக்கிரவாண்டியில் இருந்து பணிகளை மேற்கொண்ட அவர் இரவு வீடு திரும்பி உள்ளார். 


இந்நிலையில் இன்று மாலை வீட்டில் இருந்த போது சரவணனுக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது உடலை புதுச்சேரி, சித்தன்குடியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



மேலும் படிக்க | மாநாடு நடைபெற உள்ள நிலையில் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ