தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஷவர்மா சாப்பிட்ட மூன்று கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தஞ்சை : பெண்ணிடம் தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து பணம் பறித்த இளைஞர்கள்


 ஒரத்தநாடு அருகே உள்ள கால்நடைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கால்நடை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் சம்பவத்தன்று பெட்ரோல் பங்க் அருகே உள்ள துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். அதனால் இரவில் கடும் ஒவ்வாமை ஏற்பட்டு மாணவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. உடனே மாணவர்கள் மூவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



மேலும் படிக்க | ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு - 17 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை


இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் நாடு முழுக்கப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழகத்திலும் தற்போது ஷவர்மா சாப்பிட்டுவதால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்துக்கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மதுரை மாவட்டத்தில் உள்ள 52 கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயராம் தலைமையிலான குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது 10கிலோ பழைய சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டதோடு  5கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதோடு சிக்கன் ஷவர்மா கடைகளில் பழைய சிக்கன் கறிகளை பயன்படுத்தக்கூடாது, சமைத்த உணவுப்பொருட்களை குளிர் சாதன பெட்டியில் வைக்கக் கூடாது என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் ஷவர்மா கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வரும் நிலையில், தஞ்சை இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR