ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் நான்கு ராஜவீதிகளில் வலம் வந்ததாக  வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இடையில் காலப்போக்கில் நின்று போன தேர் திருவிழாவினை மீண்டும் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள்  நடத்தினர். நாளடைவில் தேரோட்டம் நின்று போய்விட்டது. கிட்டத்தட்ட  100 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேரை தஞ்சை பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 2015 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியால் தேர்திருவிழா தொடங்கி நான்கு ராஜவீதிகளில்  பல லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட புதிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இடையில் கொரானா காலமான 2020 மற்றும் 2021 ஆகிய இரு ஆண்டுகள் மட்டும் தேர்திருவிழா நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டது. தற்போது கடந்த ஆண்டு முதல் சித்திரைத் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 18 நாட்களாக சித்திரை திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. நாள் தோறும் தஞ்சை பெரியகோவிலில் காலை- மாலை தெய்வங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. கொடியேற்றப்படட பதினைந்தாம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. 


மேலும் படிக்க | அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை கிடையாது - இயக்குனர் அமீர்!


காலை 6 மணிக்கு தொடங்கிய தேரோட்ட ரதத்தில் அருள்மிகு தியாகராஜர் மற்றும் அருள்மிகு கமலாம்பான் தேரில் வீற்றிருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்னால் அருள்மிகு விநாயர் மற்றும் தெய்வானை, உடனுறை சுப்ரமணியர் வீதிஉலா செல்ல, தேருக்கு பின்னால் அருள்மிகு நீலோத்பாலாம்பாள் மற்றும் அருள்மிகு சண்டிகேசுவரர் ஊர்வலமாக சென்றனர்.


மேல ராஜ வீதியிலிருந்து வடம் பிடிக்கப்பட்டத் தேர் வடக்கு ராஜவீதி, கீழ ராஜவீதி மற்றும் தெற்கு ராஜவீதிகள் வழியாக வந்து தேரோட்டம் நிறைவு பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்தால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குடிநீர் வசதி மற்றும் பஸ் போக்குவரத்து வசதிகள் என மாவட்டம் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.


மேலும் படிக்க | பேனா நினைவுச் சின்னம்: மெரினாவின் அடையாளம் போய்விடும்- ஜெயக்குமார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ