சித்திரை பெருவிழாவினை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சித்திரை திருவிழா கடந்த 30ஆம் தேதி தஞ்சை பெரிய கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள் தோறும் பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்று வந்த நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட தியாகராஜர், கமலாம்பிகை, கந்தர் சிலையினை தேரில் வைத்து அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. 


பின்பு தேர் மாவட்ட ஆட்சியர் வடம் பிடித்து தேரோட்ட நிகழ்வை தொடங்கி வைத்தார். கடந்த 100 ஆண்டுகளாக தேரோட்டம் இல்லாத இருந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு மூலம் 38 லட்சம் ரூபாய் செலவில் தஞ்சை பெரிய கோவிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டது. 


மேலும் படிக்க | தொடர் விடுமுறையை ஒட்டி தமிழகத்தில் இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் 


இதனை அடுத்து கடந்த 5 ஆண்டுகளாக வெகு சிறப்பாக தேரோட்டம் நடைபெற்றது. 52 அடி உயரமும் 20 அடி அகலமும் 40 டன் எடையும் கொண்ட இந்த தேரில் 165 மணிகள் மற்றும் 252 தெய்வங்களின் சிற்பங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. தேரினை வடம் பிடித்து இழுக்க பக்தர்கள் போட்டி போட்டு வடம் பிடித்து இழுத்தனர். 




கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேரோட்டத்திற்காக விரிவான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


மேலும்  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு திருவிழா கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் பல இடங்களில் குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கோடைகாலம் என்பதால் தனியார் அமைப்பினர் பலர் மோர் பந்தல்களையும் ஏற்பாடு செய்திருந்தனர். நான்கு மருத்துவ குழுக்கள் மற்றும் இரண்டு ஆம்புலன்சுகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தன.


மேலும் படிக்க | சுவாமி மலையில் ‘லிப்ட்’ வசதி வேண்டும் - சட்டப்பேரவையில் ஜவஹிருல்லா வேண்டுகோள் 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR