மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 36 கடைகள் தீயில் கருகியதாக தகவல் வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு தனது 2வது கட்ட ஆய்வை இன்று தொடங்கியுள்ளது. தீ விபத்து குறித்து ஆய்வு செய்யவும், சீரமைக்கவும் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 


ஏற்கனவே தீ விபத்து நடந்த பகுதிகளை ஆய்வு செய்திருந்த நிலையில், இன்று மீண்டும் 2வது கட்ட ஆய்வைத் தொடங்கி உள்ளனர். இந்த ஆய்வுக்குப் பிறகு, கோவில் வளாகத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் கோவில் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஐஐடி பொறியாளர்கள் மற்றும் மின்சாரத்துறையினர் ஆகியோர் கலந்துக்கொண்டு ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது.