ஐயய்யோ சத்தம் கேக்குதே.. ஓட்டம் பிடித்த ஆசாமி..!
வரலாற்று சிறப்பு மிக்க ஆலந்துறையார் கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிக்க முயற்சித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஆலந்துறையார் கோவில் ஒன்று உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்வார்கள். இங்கு, பழமையான ஐம்பொன் சிலைகளும், சுவாமி சிலைகளில் விலை மதிப்புள்ள நகைகளும் அணிவிக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் அங்கு தரிசனத்திற்கு வருவதுபோல் நாள்தோறும் வந்து சென்ற மர்ம ஆசாமி ஒருவர், சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகளை நோட்டம் விட்டுச் சென்றுள்ளார்.
மேலும் படிக்க | போலீஸை வெட்டி விட்டு தப்ப முயன்ற ரவுடி என்கவுன்டர்..!
இதனை அடுத்து அதை கொள்ளையடிக்க திட்டமிட்ட அந்த நபர், நேற்று இரவு கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகைகளை திருட முயற்சி செய்துள்ளார். ஆனால் சாமி சிலையில் நகைகள் இல்லாததை பார்த்து ஏமாற்றம் அடைந்த அந்த நபர், அங்கிருந்த நடராஜர் சன்னதியின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளார். அதில் மூன்று பூட்டுகள் போடப்பட்டிருந்ததால், பூட்டை உடைக்க மிகவும் சிறமப்பட்ட அந்த மர்ம ஆசாமி, ஒரு வழியாக முதல் ஒரு பூட்டை உடைத்துள்ளார். அதை உடைத்ததும் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை மணி ஒலிக்கத்தொடங்கியுள்ளது.
இதனால், கோயிலில் நகைகளை திருட வந்த அந்த நபர் தனது திருட்டை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு தப்பி ஓடியுள்ளார். இவர், திருட்டில் மும்மூரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, ஒலித்த அந்த எச்சரிக்கை ஒலி ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஒலி என நினைத்து கோயில் காவலர்கள் உள்ளிட்டோர் நினைத்துள்ளனர். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து திருட முயற்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கோயிலில் திருட முயற்சித்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | விருத்தகிரீஸ்வரர் கோயில்: மகாசிவராத்திரியில் கலசங்கள் திருட்டு, பக்தர்கள் அதிர்ச்சி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR