தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி நீராவி முருகன் இன்று நெல்லை மாவட்டம் களக்காடு அருகே,திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், என்கவுன்டர் சம்பவத்தில் ஈடுபட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா உள்ளிட்ட நான்கு காவலர்களை ரவுடி நீராவி முருகன் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது.
காயமடைந்த காவலர்கள் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்தநிலையில் தென் மண்டல ஐஜி அன்பு சிகிச்சை பெற்றுவரும் காவலர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் இசக்கிராஜா அறிக்கை வழங்கியுள்ளதாக கூறினார்.
இந்த அறிக்கையானது மாவட்ட முதன்மை நீதிபதியிடம் வழங்கப்படும். அதனை தொடர்ந்து அவர் அளிக்கும் உத்தரவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ரவுடி நீராவி முருகன் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டிருக்கவே அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்த அவர், குறிப்பாக சென்னையில் பெண் ஒருவரை கத்திமுனையில் மிரட்டி நகை பறிப்பில் ஈடுபட்டது அனைவருக்கும் தெரிந்த சம்பவமே எனக்கூறினார்.
இந்நிலையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த நீராவி முருகனை கைது செய்ய முயன்றபோது, காவலர்கள் மீது அவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனையடுத்து தற்காப்புக்காக போலீஸார் அவரை என்கவுன்டர் செய்துள்ளனர் எனக்கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஐஜி அன்பு தெரிவித்தார்.
மேலும் படிக்க | சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; 3 பேர் மீது காவல்துறை வழக்குபதிவு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR