இன்றைய வானிலை முன்னறிவிப்பு: இரண்டே நாளில் வடகிழக்கு பருவமழை...
இரண்டே நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
இரண்டே நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், கேரளா மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக கடற்கரை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்னும் இரண்டே நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இயக்குனர் கூறுகையில்...!
வடகிழக்கு பருவமழை வெள்ளிக்கிழமை தொடங்குவதற்கு சாதகமான சூழல் தொடர்ந்து நிலவி வருவதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில் அன்று அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடதமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாலும், வெப்பச் சலனத்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.