தமிழகத்தில் மருத்துவ நுழைவு தேவான நீட் (NEET) தேர்வு முறை,  பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்து ஆராய  ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில், உயர்நிலைக் குழுவை முதல்வர் மு.க ஸ்டாலின் அமைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த குழுவில்,டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், டாக்டர் ஜவஹர் நேசன்,  ஆகியோர் தவிர, சட்டத்துறை அரசு செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், மருத்துவ கல்வி இயக்ககத்தின் இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். 


இந்நிலையில், நீட் (NEET)  தேர்வு குறித்த பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிய, வரும் 23ம் தேதிக்குள் நீட் தேர்வு தொடர்பான கருத்துக்களை  பொதுமக்கள் சமர்பிக்கலாம் என நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது. Cancel NEET: நீட்


ALSO READ | தேர்வை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்


இதுதொடர்பாக  வெளியிடப்பட்ட நாளிதழ் விளம்பரத்தில்,  நீட் தேர்வு குறித்த கருத்துக்களை பொது மக்கள் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அஞ்சல் வழி மூலமாக நீதிபதி ஏ.கே.ராஜன், யர்நிலைக் குழு, மருத்துவ கல்வி இயக்ககம், 3வது தளம், கீழ் பாக்கம், சென்னை என்ற முகவரிக்கோ அல்லது neetimpact2021@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கருத்துக்கள் எழுதிய கடிதத்தை நேரடியாக மருத்துவக் கல்வி இயக்குநகரத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப் பெட்டியில் போடலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. வரும் 23.06.2021க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டது. 


முன்னதாக, செய்தியார்களிடம் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி, ஏ.கே. இராஜன், “ நீட் (NEET) தேர்வு குறித்த முக்கியமான தரவுகள் தேவைப்படுகின்றன. தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என ஆய்வு செய்து, ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிப்போம்" என்று தெரிவித்தார்.  


தமிழக சட்டமன்ற தேர்தல்களில், திமுக ஆட்சிக்கு வந்தால், கண்டிப்பாக தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு அகற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | TN NEET update: தமிழகத்தில் நடக்குமா நீட் தேர்வு? நீட் தாக்கம் குறித்த ஆய்வுக்குழுவில் உறுப்பினர்கள் நியமனம்