TN NEET update: தமிழகத்தில் நடக்குமா நீட் தேர்வு? நீட் தாக்கம் குறித்த ஆய்வுக்குழுவில் உறுப்பினர்கள் நியமனம்

மருத்துவப் படிப்பில் சேருவதற்கு எழுதப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மாணவர்களுக்கு சமமான ஒரு மேடையை வழங்கவில்லை என்றும், அரசு பள்ளி மாணவர்கள் இதில் அதிக சிரமத்தை எதிர்கொள்கிறார்கள் என்றும் தமிழகத்தில் ஓரு சாரார் இடையே வலுவான கருத்து உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 10, 2021, 04:08 PM IST
  • நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் தாக்கத்தைப் பற்றி ஆராய குழு.
  • குழுவில் எட்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் - தமிழக அரசு.
TN NEET update: தமிழகத்தில் நடக்குமா நீட் தேர்வு? நீட் தாக்கம் குறித்த ஆய்வுக்குழுவில் உறுப்பினர்கள் நியமனம் title=

சென்னை: மருத்துவப் படிப்பில் சேருவதற்கு எழுதப்படும் நுழைவுத் தேர்வாகும் நீட் தேர்வு. எனினும், இந்த தேர்வு மாணவர்களுக்கு சமமான ஒரு மேடையை வழங்கவில்லை என்றும், அரசு பள்ளி மாணவர்கள் இதில் அதிக சிரமத்தை எதிர்கொள்கிறார்கள் என்றும் தமிழகத்தில் ஓரு சாரார் இடையே வலுவான கருத்து உள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல்களில், திமுக ஆட்சிக்கு வந்தால், கண்டிப்பாக தமிழகத்தில் இருந்து நீட் தெர்வு அகற்றப்படும் என கட்சி கூறியிருந்தது. தற்பொது அது தொடர்பான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. 

நீட் தேர்வால் (NEET Exam) மாணவர்களுக்கு ஏற்படும் தாக்கத்தைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவில் எட்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவுக்கு நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமை வகிக்கிறார். 

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட தாக்கம் மற்றும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவும் ஒரு குழுவை அமைத்து தமிழக அரசு இது குறித்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த குழுவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமை வகிப்பார். இந்த குழுவில் மருத்துவர்கள் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ஜவஹர் நேசன் உள்ளிட்ட 8 பேர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் எத்தனை பேர் நீட் தேர்வு எழுதியுள்ளார்கள் என்றும் அதில் எத்தனை பேர் வெற்றிபெற்றனர் என்றும் எந்த குழு தகவல்களை சேகரிக்கும். மேலும் நீட் தெர்வு குறித்த மேலும் சில தகவல்களையும், கடந்த 5 ஆண்டு புள்ளிவிவரங்களையும் சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்த குழுவுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது. 

ALSO READ: Cancel NEET: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இது குறித்த விரிவான அறிக்கை பெறப்பட்ட பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்துமுடிவு எடுக்கப்படும் என்றும் பின்னர் இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு நீட் தேர்வு தேவை இல்லை என்றும், இது மாணவர்களை சமமாக பரிசோதிக்கும் தேர்வாக இருக்காது என்றும் பல தமிழக (Tamil Nadu) அரசியல் கட்சிகள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றன.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் உரிமை தமிழக அரசுக்கு உண்டு என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கூறி வருவது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, கொரோனா தொற்று பரவல் காரணமாக சி.பி.எஸ்.சி (CBSE) 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் உட்பட பல மாநிலங்களும் 12 ஆம் வகுப்பி பொதுத் தேர்வுகளை ரத்து செய்தன. மாணவர்களுக்கு எந்த வகையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பது பற்றி விரைவில் மத்திய மாநில அரசுகள் தகவல்களை வெளியிடும்.

இந்த நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை கருத்திக் கொண்டு 12 ஆம் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நீட், ஜெ.இ.இ போன்ற தேர்வுகளை மட்டும் எவ்வாறு நடத்த முடியும் என தமிழகத்தில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றன. 

ALSO READ: NEET UG 2021 தேதி விரைவில் வெளியீடு, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தேர்வு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News