கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!!
தமிழகத்தில் 2 நாள்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதளம் தொடங்கி வைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர்!!
தமிழகத்தில் 2 நாள்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதளம் தொடங்கி வைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர்!!
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி என்றெல்லாம் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தி வந்த நிலையில் தற்போது உயர்கல்வித் துறையும் ஆன்லைன் சார்ந்த விஷயங்களை நோக்கி நகர்ந்துள்ளது.
இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. வழக்கமாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பங்கள் பெறுவதற்கும் மாணவர் சேர்க்கைகாவும் நேரடியாக கல்லூரிகளுக்கு வருகை தருவது வழக்கம். இதன் காரணமாக அதிகளவு மாணவர்கள் திரள்வார்கள்.
READ | விரைவில் தாயகம் திரும்புவார்கள் தமிழக மீனவர்கள்: துரித கதியில் ஏற்பாடுகள்
கொரோனோ பெருந்தொற்று காரணமாக அதிகளவு மாணவர்கள் கல்லூரிகளில் திரள்வதை தடுக்கும் வகையில் தற்போது ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களில் மாணவர் சேர்க்கையான இணையதளம் தொடங்கப்படும் என்றும், ஆன்லைன் மூலம் சேர்க்கை நடத்த உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். தமிழக உயர்கல்வித்துறையின் இந்த முடிவு பாராட்டக்கூடியதாக பார்க்கப்படுகின்றது.