பட்டாசு தொழிற்சாலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி
பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி அறிவித்து முதல்வர் உத்தரவு!
மதுரை: தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பட்டாசு தொழிற்சாலையில் (Firecracker Factory) ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்க என தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி (Edappadi K. Palaniswami) உத்தரவிட்டுள்ளார்.
பட்டாசு தொழிற்சாலையில் விபத்து குறித்த ஆரம்ப விசாரணையில் வெடிப்புகளுக்கு வழிவகுக்கும் இரசாயனங்கள் தீப்பிடித்தன. இதனால் வெடி விபத்து ஏற்பட்டு, கடுமையாக சேதமடைந்தது.
பல தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் தப்பிக்க முடிந்தது. தீயை அணைக்க விருதுநகர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து தீயணைப்பு சேவை பிரிவுகள் பயன்படுத்தப்பட்டன என்று போலீசார் தெரிவித்தனர்.
பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு,க. ஸ்டாலின் (M K Stalin) கோரிக்கை வைத்துள்ளார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR