பிரசித்திப்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது.....
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.......
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்கியது; வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.......
பொங்கள் பண்டிகையினை முன்னிட்டு ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு 3 இடங்களில் நடத்தப்படுகிறது. உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு வரும் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. விதிமீறல் ஏதுமின்றி, அசம்பாவித சம்பவங்கள் இன்றி அங்கு போட்டிகள் அமைதியாக நடந்து முடிந்தன.
இந்நிலையில், பாலமேட்டில் இன்று போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. போட்டிகளில் பங்கேற்பதற்காக 800 காளைகள் மற்றும் 800 வீரர்களுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது.
மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வீரர்கள் பங்கேற்க உள்ளன. வீரர்கள் தேர்வானபின், அவர்களுக்கு உடல்தகுதி சோதனை மேற்கொள்ளப்பட்டது. விதிமுறைகளின்படி போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செய்துள்ளன.
இதை தொடர்ந்து, தற்போது பிரசித்திப்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டை மதுரை ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் 988 காளைகளும், 846 வீரர்களும் பங்கேற்பு 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.