கொரோனா (Corona) தொற்று நோய் பரவல் காரணமாக, லாக்டவுன் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அதில் வேலை பார்த்து வந்த பல தொழிலாளர்கள், சொந்து ஊருக்கு சென்று விட்டனர். அன்லாக் நடவடிக்கைகள் தொடங்கி விட்ட நிலையில் மிகச் சிலரே திரும்பி வந்துள்ளதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் திருப்பூரில் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் வைத்துள்ள 36 ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் உள்ள ஜவுளி பூங்காவில் உற்பத்தியைத் தொடங்க அரசாங்கத்திடம் அனுமதி பெற்றுள்ளனர்.


வேலை பளு நிறைந்த, ஆடைகளை தைத்தல், அயர்ன் செய்தல், பேக் செய்தல், டெஸ்பேட்ச் செய்தல் போன்ற பணிகள் வேறு நகரங்களுக்கு மாற்றப்படும் என்றும், குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள் கிடைக்கும் போது, செலவுகள் குறைந்த, உலகளாவிய சந்தையில் சிறந்த விலையில் பொருட்களைம் ஏற்றுமதி செய்யலாம்என, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


10 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஜவுளி தொழிற்சாலைகள்  மூடத் தொடங்கியபோது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு வரமாக இருந்தனர் என்றும் ஆனால் தற்போது COVID நெருக்கடி மீண்டும் தொழிலாளர் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது எனவும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 


மேலும் படிக்க | Aadhaar உடன் மொபைல் எண் அப்டேட் செய்வது எளிது.. ஆவணம் எதுவும் தேவையில்லை..!!!


நாகப்பட்டினம் தவிர, திருவண்ணாமலை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் முறைவான சம்பளத்தில் ஆட்கள் கிடைப்பதால், அது போன்ற இடங்களிலும் தொழிற்சாலைகளை மாற்ற ஆடை உற்பத்தி தொழிற்சாலை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதே சமயம் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வணிக நடவடிக்கைகள் தொடரும். உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நடவடிக்கைகளை மட்டும் வேறு நகரங்களுக்கு மாற்றுவதில் உறுதியாக உள்ளனர். 


தற்போது, ​​ஆயத்த ஆடைகள் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளன. ஆனால் முன்பு போல் முழு வீச்சில் இன்னும் செயல்படவில்லை.


இதற்கிடையில், திருப்பூரில் வாழ்க்கை தரம் நன்றாக இல்லை என்பதால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு சென்று விட்டார்கள் என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன. "புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கபட்டு, அவர்களை திருப்பூருக்கு அழைத்து வந்து, அவர்களின் தேவைகளை அரசாங்கம் கவனிக்க வேண்டும்" என்று திருப்பூர் மாவட்ட தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் கூறினார்.


மேலும் படிக்க | Maths-ல் 100% வாங்கவேண்டுமா? இந்த எளிய வழியைப் பின்பற்றிப் பாருங்களேன்!!