Aadhaar உடன் மொபைல் எண் அப்டேட் செய்வது எளிது.. ஆவணம் எதுவும் தேவையில்லை..!!!

ஆதாரில் உங்கள் மொபைல் எண்ணை அப்டேட் செய்ய எந்த ஆவணமும் தேவையில்லை என UIDAI கூறியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 14, 2020, 02:42 PM IST
  • UIDAI (Unique Identification Authority of India)ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்கும் விதிகளை திருத்தியுள்ளது.
  • நீங்கள் தவறான எண் அல்லது பழைய எண் குறித்த விபரங்களை அப்டேட் செய்யவில்லை என்றால், சிஅல் சேவைகளை இழக்க நேரிடலாம்.
  • உங்கள் மொபைல் எண் மாறியிருந்தால், இன்றே அப்டேட் செய்யவும்.
Aadhaar உடன் மொபைல் எண் அப்டேட் செய்வது எளிது.. ஆவணம் எதுவும் தேவையில்லை..!!! title=

UIDAI (Unique Identification Authority of India)ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பது ட்தொடர்பான விதிகளை திருத்தியுள்ளது. தற்போது, உங்கள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பது மிகவும் முக்கியம். உங்கள் மொபைல் எண் மாறி இருந்தால் அதனை உடனே புதுப்பிக்கவும். அப்படி அப்டேட் செய்யாவிட்டால்,  நீங்கள் பல சேவைகளைப் பயன்படுத்த முடியாது.

இதுபோன்ற சூழ்நிலையில், உடனடியாக உங்கள் மொபைல் எண்ணை உங்கள் ஆதார் உடன் இணைக்கவும். ஆதாரில் உள்ள மொபைல் எண்ணை மாற்ற UIDAI ஒரு வழிமுறையை கூறியுள்ளது.

உங்கள் தற்போதைய மொபைல் எண்ணை, அப்டேட் செய்ய ஆவணம் எதுவும் தேவையில்லை. நீங்கள் உங்கள் ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள எந்த ஆதார் சேவை மையத்திற்கும் சென்று மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்.

அப்டேட் செய்யவில்லை என்றால் ஏற்படும் பாதிப்புகள்
 
நீங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தகவலை சர்பார்ப்பது தொடர்பான எந்த ஒரு செயல்முறையை பின்பற்றும் போதும்,  ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணில் ஒரு OTP வரும். இந்த OTP உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பபடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தவறான எண் அல்லது பழைய எண் குறித்து விபரங்களை அப்டேட் செய்யவில்லை என்றால், உங்களுக்கு OTP கிடைக்காது. இதன் காரணமாக உங்கள் செயல்முறையை நீங்கள் நிறைவு செய்ய முடியாது. இது தவிர, எந்த ஆவணத்துடனும் உங்களால் ஆதார் இணைக்க முடியாது.

மேலும் படிக்க | 150 ரூபாயில் குழந்தைகளின் வாழ்வை வளமாக்கும் LIC பாலிஸி திட்டம்..!!!

அப்டேட் செய்ய ரூ.50 செலுத்த வேண்டும்

உங்கள் மொபைல் எண்ணுடன் ஆதார் இணைக்க விரும்பினால், நீங்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். மொபைல் எண்ணைப் புதுப்பிக்க, அதாவது அப்டேட் செய்ய இங்கே நீங்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்குப் பிறகு உங்கள் மொபைல் எண் ஆதார் உடன் இணைக்கப்படும்.

இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

ஆதார் தொடர்பான ஏதேனும் சிக்கல் இருந்தால், நீங்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் ஆன 1947 ஐ அழைக்கலாம். உங்கள் புகார் அல்லது நீங்கள் சந்திக்கும் பிரச்சனையை மின்னஞ்சல் மூலம், help@uidai.gov.in என்ற முகவரிக்கு எழுதலாம். உங்கள் பிரச்சினையை விரைவில் தீர்க்க UIDAI முயற்சிக்கும்.

மேலும் படிக்க | சிறிய மூலதனத்தில், அதிக வருமானம் தரும் “ஸ்மார்ட் தொழில்” பற்றி அறியலாம்..!!!

Trending News